Monday, 10 November 2014

monthly horoscope prediction tamil nov 2014 mesham


மேஷம்
தொலை நோக்குச் சிந்தனையும் மற்றவர்களுக்கு தொந்தரவு தராத குணமும் கொண்ட நீங்கள், சில இடங்களில் மௌனமாக இருந்து சாதிப்பவர்கள். இந்த மாதத்தில் தைரியம், புகழ், கௌரவம் கூடும். புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி தங்கும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். சிலர் இருக்கும் வீட்டை கொஞ்சம் விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். உங்களை அவமானப்படுத்தியவரெல்லாம் வலிய வந்து மன்னிப்பு கேட்பார்கள். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். நண்பர்களின் சுப காரியங்களில் கலந்துகொள்வீர்கள். சூரியன் சாதகமாக இல்லாததால் பேச்சால் பிரச்னை, சிறுசிறு விபத்து, தலைச்சுற்றல், வாகனப் பழுது வந்து நீங்கும். ராசிக்குள் குரு அமர்ந்திருப்பதால் வீண் பழி, செலவு, வேலைச்சுமை வந்துப் போகும். அரசியல்வாதிகளே! எதிர்கட்சிக்காரர்களை விமர்சித்து பேசாதீர்கள். மாணவர்களே! அதிகாலையில் எழுந்து படிப்பதுடன், விடைகளை எழுதி பார்ப்பது நல்லது. கன்னிப் பெண்களே! காதல் விவகாரங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள். உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டு இலாபத்தைப் பெருக்குவீர்கள். வேலையாட்கள் அவ்வப்போது முரண்டு பிடிக்கத்தான் செய்வார்கள். உத்தியோகத்தில் அடுக்கடுக்கான வேலைகளால் மனஇறுக்கம் அதிகரிக்கும். சக ஊழியர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கள். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறும் மாதமிது.  பரிகாரம்: ஸ்ரீநந்தீஸ்வரரை வணங்குங்கள். வாய்ப் பேச இயலாதவர்களுக்கு உதவுங்கள்.

No comments:

Post a Comment