Monday, 10 November 2014

monthly horoscope prediction tamil nov 2014 kumbam

கும்பம் 
காலம் பொன் போன்றது என்பதை அறிந்த நீங்கள், தன் சொந்த உழைப்பில் முன்னேறத் துடிப்பவர்கள். இந்த மாதத்தில் தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கி தீர்வு காண்பீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். பூர்வீகச் சொத்தை புதுபிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மதிப்பார்கள். ஆன்மீக காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். திட்டமிட்டபடி சில பயணங்கள் அமையும். வெளிவட்டாரம் சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரும். வீடு, மனை வாங்குவது விற்பதில் அவசரம் வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவும் எடுக்க வேண்டாம். குரு 6-ல் தொடர்வதால் எதிலும் நம்பிக்கையின்மை, ஈடுபாடற்ற நிலை, தாழ்வுமனப்பான்மை வந்துப் போகும். கன்னிப் பெண்களே! நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அரசு காரியங்கள் சாதமாக அமையும். கௌரவப் பதவிகள் தேடி வரும். புது வேலைக் கிடைக்கும். மாணவர்களே! டி.வி பார்ப்பதை குறையுங்கள். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களை அனுசரித்துப் போங்கள். பழைய பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பார். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். கலைத்துறையினர்களே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். புதிய அணுகுமுறையால் சாதிக்க வேண்டிய மாதமிது. பரிகாரம்: ஸ்ரீ வெங்கடாஜலபதியை வணங்குங்கள். கண் பார்வையற்றவர்களுக்கு உதவுங்கள்.

No comments:

Post a Comment