Monday, 10 November 2014

monthly horoscope prediction tamil nov 2014 meenam

 
மீனம்
பிறர் மதிக்கும்படி நடந்து கொள்ளும் நீங்கள், பணம் காசை விட குணத்திற்கு முக்கியத்துவம் தருபவர்கள். இந்த மாதத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பிள்ளைகளால் இருந்து வந்த உபத்திரவங்கள் விலகும். அவர்களின் உடல் நலத்தில் அக்கறைக் காட்டுங்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களைப் புரிந்துக் கொண்டு வலிய வந்துப் பேசுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வருவீர்கள். வெளியூர் பயணங்கள் ஆதாயம் உண்டு. உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். சொத்துப் பிரச்னை தீரும். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வழக்கு சாதகமாகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். கன்னிப்பெண்களே! கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். பழைய நண்பர்களைச் சந்தித்து எதிர்காலத் திட்டங்களைப் பற்றி விவாதிப்பீர்கள். மாணவர்களே! படிப்பில் முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். பழைய வேலையாட்கள் மீண்டும் பணியில் வந்து சேர்வார்கள். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினர்களே! வசதி, வாய்ப்புகள் பெருகும். செல்வாக்கு உயரும் மாதமிது. பரிகாரம்: ஸ்ரீகால பைரவரை வணங்குங்கள். உழவாரப் பணிக்கு உதவுங்கள்.

No comments:

Post a Comment