Monday, 10 November 2014

monthly horoscope prediction tamil nov 2014 kanni

கன்னி 
கடந்த கால நிகழ்வுகளை அவ்வப்போது அசை போடும் நீங்கள் எதையும் திட்டமிட்டு செய்வதில் வல்லவர்கள். இந்த மாதத்தில் விடாபிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிக்க வேண்டி வரும். எதிர்பார்த்த தொகை வராவிட்டாலும் எதிர்பாராத வகையில் பணம் வரும். குடும்பத்தில் ஓரளவு நிம்மதி பிறக்கும். பிள்ளைகள் உங்கள் மனங்கோணம் நடந்துக் கொள்வார்கள். பழைய சொத்தை மாற்றி புது வீடு வாங்குவீர்கள். வெளியூலிருந்து மகிழ்ச்சி தரும் செய்தி வரும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். பழைய கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். சகோதரிக்கு நல்ல வரன் அமையும். உடன்பிறந்தவர்களால் சங்கடங்கள் வரும். ஜென்மச்சனி தொடர்வதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால் வீண் சந்தேகம், சிறுசிறு விபத்து, விரையம் வந்துச் செல்லும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். குலதெய்வப் பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அரசியல்வாதிகளே! ஆதாரமில்லாமல் எதிர்கட்சிக்காரர்களை விமர்சிக்க வேண்டாம். மாணவர்களே! விளையாட்டை குறைத்து படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். கன்னிப் பெண்களே! மனசை அலைபாயவிடாமல் ஒருநிலை படுத்துங்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். மற்றவர்களின் அறிவுரைகளை ஏற்காமல் சந்தை நிலவரம் அறிந்து செயல்படப்பாருங்கள். வேலையாட்களால் ரகசியங்கள் கசியக் கூடும். உத்தியோகத்தில் சிறுசிறு அவமானங்கள் வரக்கூடும். வேலைசுமை வாட்டியெடுக்கத் தான் செய்யும். கலைத்துறையினர்களே! உங்களின் கலைத்திறன் வளரும். அச்சம் விலகி அதிகாரம் பெருகும் மாதமிது. பரிகாரம்: ஸ்ரீசனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வணங்குங்கள். வேப்ப மரக்கன்று நடுங்கள்.

No comments:

Post a Comment