Monday, 10 November 2014

monthly horoscope prediction tamil nov 2014 virchigam


விருச்சிகம் 
கலகலப்பான பேச்சாலும், புன் சிரிப்பாலும் அனைவரையும் வசீகரிக்கும் நீங்கள், அன்புக்கு அடிமையாவீர்கள். இந்த மாதத்தில் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள்-. கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும். வீட்டில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். ஏழரைச் சனி இருப்பதால் மூட்டுவலி, முதுகுவலி, அசிடிட்டி, மனைவியுடன் ஈகோ பிரச்னை வந்துப் போகும். பால்ய நண்பர்களின் உதவி கிடைக்கும். மூத்த சகோதரர் பாசமாக நடந்து கொள்வார். புது வாகனம் வாங்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரைகுறையாக நின்றிருந்த வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சூரியன் சாதகமாக இல்லாததால் மறைமுக எதிர்ப்பு, வீண் செலவு, டென்ஷன் வந்துப் போகும். சமூக நலப்பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். அரசு காரியங்கள் தடைப்பட்டு முடியும். அரசியல்வாதிகளே! கட்சி மேலிடத்தை பகைத்துக் கொள்ளாதீர்கள். மாணவர்களே! வகுப்பறையில் வீண் அரட்டை வேண்டாம். தெரியாதவற்றை ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். கன்னிப்பெண்களே! தகுதிக் கேற்ப புது வேலை அமையும். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் மறைமுக போட்டிகளை சமாளிப்பீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரும். வாடிக்கையாளர்களை கனிவாக நடத்துங்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். மேலதிகாரியால் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். கலைத்துறையினர்களே! கிடைக்கிற வாய்ப்பு சின்னதாக, சாதாரணமானதாக இருந்தாலும் பயன்படுத்திக் கொள்வது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும் மாதமிது. பரிகாரம்: ஸ்ரீகருடாழ்வாரை வணங்குங்கள். ஆதரவற்ற குழந்தைக்கு முடிந்த உதவிகளை செய்யுங்கள்.

No comments:

Post a Comment