Thursday, 20 November 2014

சிந்தனை துளிகள்...

1. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்
2. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்
3. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
4. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய்
இருப்பதில்லை
5. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்
6. யார் சொல்வது சரி என்பதை விட, எது சரி என்பதே முக்கியம்
7. பலமுறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்
8. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதற் எறிவோம்
9. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்
10. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்
11. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்

No comments:

Post a Comment