Monday, 10 November 2014

monthly horoscope prediction tamil nov 2014 midunam


மிதுனம்
பிறர் சொத்துக்கு ஆசைப்படாதவர்களான நீங்கள், தர்மம் தலைக் காக்கும் என்பதில் ஆழமான நம்பிக்கை உள்ளவர்கள். இந்த மாதத்தில் பிரச்னைகளை சமாளிக்கும் மனோபலம் அதிகரிக்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வழக்கில் வெற்றியுண்டு. சகோதர சகோதரிகளிடையே இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். புதிதாக நிலம், வீடு வாங்குவீர்கள். உறவினர்களிடம் அளவாகப் பழகுவது நல்லது. சனி சரியில்லததால் வீண்பழி, தாயாருக்கு மருத்துவச் செலவு, வேலைச்சுமை வந்து நீங்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தியானம், யோகா, ஆன்மிகம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். அவ்வப்போது சளித் தொந்தரவு, தொண்டைப் புகைச்சல், கழுத்து வலி வந்து விலகும். அரசியல்வாதிகளே! தலைமையைப் பற்றி சகாக்களிடம் குறை கூறவேண்டாம். மாணவர்களே! வகுப்பறையில் ஆசிரியிரிடம் தயங்காமல் சந்தேகங்களை கேளுங்கள். கன்னிப் பெண்களே! பெற்றோரை அனுசரித்துப் போங்கள். அக்கம்-பக்க வீட்டார் அன்பாக பேசுகிறார்கள் என்று குடும்ப விஷயங்களைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகளைப் பற்றி யோசிப்பீர்கள். வர வேண்டிய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். வேலையாட்களால் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். என்றாலும் அனுசரித்துப் போங்கள். பங்குதாரர்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் தவறுகளை சுட்டிக் காட்டுவீர்கள். சக ஊழியர்கள் உதவுவார்கள். கலைத்துறையினர்களே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கடின உழைப்பால் நினைத்ததை முடிக்கும் மாதமிது. பரிகாரம்: ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மரை வணங்குங்கள். வெள்ளிக் கிழமைகளில் வஸ்திர தானம் செய்யுங்கள்.
 

No comments:

Post a Comment