Monday, 10 November 2014

monthly horoscope prediction tamil nov 2014 makaram

 
மகரம்
புரட்சிகரமான சிந்தனையுடைய நீங்கள், அதிகாரத்திற்கும், ஆணவத்திற்கும் அடங்கிப் போக மாட்டீர்கள். இந்த மாதத்தில் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். கைமாற்றாக வாங்கியிருந்ததையும் தந்து முடிப்பீர்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகளால் நிம்மதி அடைவீர்கள். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். உறவினர்கள், நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும். முன்பு நீங்கள் பலருக்கு செய்த உதவிகள் இப்போது உங்களுக்கு கைகொடுக்கும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சுமுகமாக பேசி முடிக்கப்பாருங்கள். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்களுடன் வீண் செலவும், மனக்கசப்பும் வந்து நீங்கும். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். கன்னிப் பெண்களே! கசந்த காதல் இனிக்கும். மனதிற்கு இதமான செய்திகள் வந்து சேரும். சித்தர்கள், ஆன்மிகவாதிகளைச் சந்தித்து ஆசி பெறுவீர்கள். மாணவர்களே! போட்டி, தேர்வில் போராடி வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்யுங்கள். வேலையாட்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வராமல் இருந்த பாக்கிகளை பக்குவமாகப் பேசி வசூலிப்பீர்கள். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார். உத்தியோகத்தில் மற்றவர்களின் குறைகளில் கவனம் செலுத்த வேண்டாம். மேலதிகாரி ஆதரிப்பார். கலைத்துறையினர்களே! புது வாய்ப்புகள் தேடி வரும். காலநேரம் கனிந்து வரும் மாதமிது.  பரிகாரம்: படவேடு ஸ்ரீரேணுகாம்பாளை வணங்குங்கள். பழைய அம்மன் ஆலயத்தை புதுப்பிக்க உதவுங்கள்.

No comments:

Post a Comment