1760 – ஜனவரி 22-ஆம் நாள் நடைபெற்ற போர் என்ற ஒரு ஒற்றை நிகழ்வை மட்டுமே வைத்துக்கொண்டு ஒரு வரலாற்றுப் பார்வையைப் பெற்று விட முடியாது. வந்தவாசியைக் கொண்டுள்ள திருவண்ணாமலைப் பகுதி, அதைச் சார்ந்துள்ள திருக்கோவிலூர், செஞ்சிப் பகுதிகளையும் இணைத்து தமிழக வரலாற்றில் தென்னிந்திய வரலாற்றில் இந்திய வரலாற்றில், சில தெளிவுகளை, சில புரிதல்களை நாம் பெற்முடியும் இதனை விளக்குவதற்கான ஒரு வாய்ப்பாகத்தான் வந்தவாசிப் போரின் 250 ஆண்டுகள் நிறைவினை நாம் நினைவிற்கொள்ள வேண்டியுள்ளது.
பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டிற்கும் பிரிட்டன் நாட்டிற்கும் இடையே ஆசியாவை கைப்பற்றும் முயற்சியில் போர் நடந்தது. அப்போது மூன்றாவது கர்நாடக போர் என்ற பெயரில் ஏழு ஆண்டுகள் தொடர்ந்து போர் நடந்து வந்தது. இந்த போர் 1756 முதல் 1763 வரை நடைபெற்றது. இதில் 1760 ஆம் ஆண்டு வந்தவாசி கோட்டையை கைப்பற்ற இரு நாடுகளும் மோதிக்கொண்டன. இந்த போரில் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த அயர் கூட் தலைமையிலான படை பிரான்சு நாட்டை சேர்ந்த ஜெனரல் லால்லி தலைமையிலான படையை தோற்கடித்தது. இந்த வெற்றி பிரிட்டனின் மாபெரும் வேறுபல வெற்றிக்கு வழி வகுத்தது.
இந்த போரில் பிரெஞ்சு அரசு 300 குதிரைப் படைகளையும், 2500 எண்ணிக்கை கொண்ட காலாட்படையையும், 1300 சிப்பாய்களையும், 3000 மராத்தா வீரர்களையும், 16 குண்டு துளைக்கும் கருவிகளையும் உபயோகித்தனர். அதே போல், முறையே ஆங்கிலேயர்களும் ( 80 250 1900 2100 26) உபயோகித்தனர். இந்த போரில், செங்கல்பட்டு, திண்டிவனம், திருவண்ணாமலை போன்ற இடங்கள் ஆங்கிலேயர்களின் பிடிக்குச் சென்றன.
இதற்குப் பின், 1761 இல் பாண்டிச்சேரி ஆங்கிலேயர்களின் பிரதேசமானது. ஆனால், மூன்றாம் கர்நாடகப் போரின் முடிவில், அதாவது 1763 இல், பாரிஸ் ஒப்பந்ததத்தின் படி, பாண்டிச்சேரி பிரெஞ்சு அரசின் வாணிபத் தளமாக உபயோப் பட ஆங்கிலேயர்களின் அரசு ஒத்துக் கொண்டது. பிரெஞ்சு அரசும் ஆங்கிலேயர்களுக்கு உறுதுணையாக இருக்கப் பணிந்தது. பிரெஞ்சு நாட்டவர்க்கும், ஆங்கிலேயர்களுக்குமான போரின் முடிவும், இந்தியர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்குமான போரின் தொடக்கமுமாக இந்த மூன்றாம் கர்நாடகப் போர் இருந்தது.

வந்தவாசி கோட்டையிலிருந்து செஞ்சிக் கோட்டை வரை சுரங்கப் பாதை இருந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த சுரங்கப் பாதைகள் காலப் போக்கில் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் அழிந்து விட்டதாக கூற படுகிறது. தற்போது கோட்டையில் மிஞ்சி இருப்பது சில பகுதிகள் மட்டுமே. மக்கள் ஆக்கிரமிப்பால் பெரும்பாலான கோட்டை அழிந்துவிட்டது. ஆனால் இப்போதும் கோட்டைக்குள் நுழைந்தால் பழங்காலத்து கத்தி, போர் உடைகள், குதிரை கடிவாளம், பீரங்கி குண்டுகள் போன்ற ஏராளமான பொருட்கள் கிடைப்பதாக கூறப் படுகின்றது.. மேலும் இந்த கோட்டையின் சுரங்கத்தினுள் புதையல்கள் இருக்க கூடும் எனவும் மக்கள் நம்புகின்றனர்
No comments:
Post a Comment