Monday, 17 November 2014

மயிலாப்பூர் கபாலீஸ்வரர்


  1. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் நீண்ட ஆயுள் கிட்ட ,எம பயம் அகல வழிபட் கண் கண்ட தெய்வம் .."திக்கற்றோருக்கு தெய்வமே துணை!"....மயிலையே கயிலை; கயிலையே மயிலை என்னும் பெருமைக்குரிய தலமாகத் திருமயிலை திகழ்கிறது.திருமயிலை[மயிலாப்பூர் சென்னை ] தலத்தில் சிவநேசசெட்டியார் என்பவர் வாழ்ந்து வந்தார். சிவபெருமான் மீது அளவு கடந்த பக்தியுடைய அவருக்கு பூம்பாவை என்ற ஒரு மகள் இருந்தாள். திருஞானசம்பந்தரைப் பற்றியும் அவரின் சைவ சமய தொண்டினைப் பற்றியும் கேள்விப்பட்ட சிவநேசர் தன் மகள் பூம்பாவையை சம்பந்தருக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தார்.அவ்வாறு இருக்கையில் ஒரு சமயம் பூம்பாவை தோட்டத்தில் தன் தோழிகளுடன் மலர் பறித்துக் கொண்டு இருந்த போது பாம்பு தீண்டி இறந்து விடுகிறாள். மகள் இறந்து விட்ட போதிலும் அவள் சம்பந்தருக்கு உரியவள் என்ற எண்ணம் சிவநேசருக்கு வர மகளின் அஸ்தி மற்றும் எலும்புகளை ஒரு குடத்திலிட்டு கன்னி மாடத்தில் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தார்.மகளே இறந்துவிட்டாள், எலும்பையும் சாம்பலையும் புனித நதியில் கரைக்காமல் இவன் அவளின் எலும்பை பாதுகாத்து என்ன செய்ய போகிறான்?. என்று ஊர் மக்களும் உறவினர்களும் பேசினாலும், அதை பற்றி எதையும் காதில் வாங்காமல் சிவநேசர் தன் சிவதொண்டில் தொடர்ந்தார். மயிலை கபாலீஸ்வரனும் அன்னை கற்பகவல்லியும் சிவநேசர் மீது கருனை காட்டினார்கள். திருஞானசம்பந்தரை திருவொற்றியூர் வரவழைத்தார்கள். திருவொற்றியூருக்கு சம்பந்தர் வந்த தகவல் சிவநேசருக்கு தெரிந்தது. திருவொற்றியூருக்கு சென்று சம்பந்தரை பார்த்து வணங்கி, “சுவாமி அருகில்தான் மயிலாப்பூர் இருக்கிறது. தாங்கள் அவசியம் வர வேண்டும்.” என்று அழைத்தார். சிவநேசருடன் மயிலை வந்தார் ஞானசம்பந்தர். கபாலீஸ்வரர் கோயிலை வணங்கினார். பிறகு சிவநேசரை பற்றியும் அவர் குடும்பத்தை பற்றியும் அவரிடமே கேட்க, சிவநேசர் தன் துக்கத்தை மறைக்க முடியாமல் அழுதார். தன் மகள் பூம்பாவையை தங்களுக்கு மனைவியாக கன்னிகாதானம் செய்து தர வளர்த்து வந்தேன். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு பாம்பு தீண்டி இறந்து போனாள். அவள் உடலை தகனம் செய்து சாம்பலையும் எலும்பையும் ஒரு குடத்தில் பாதுகாத்து வருகிறேன்.” என்று கதறியபடி சொன்னார் சிவநேசர். திருஞானசம்பந்தர் அந்த குடத்தை எடுத்து வரும்படி சொல்ல, பூம்பாவையின் ஆத்மாவுக்கு சம்பந்தர் சாந்தி தரபோவதாக எண்ணி உடனடியாக குடம் கபாலீஸ்வரர் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. “மட்டிட்ட புன்னையுங் கானல் மடமயிலைக்…, என தொடங்கும் பதிகத்தை பாடினார். பாடலில்? கார்த்திகை நாள் விளக்கீடு காணாதே போதியோ பூம்பவாய்? தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்? என்று குடத்தில் எலும்பும் சாம்பலாகவும் இருக்கும் பூம்பாவையிடமே கேட்கிறார் திருஞானசம்பந்தர். சம்பந்தர் பாடி முடித்ததும் அப்போது பூம்பாவை உயிரோடு இருந்திருந்தால் என்ன வயது இருக்குமோ அந்த வயதோடு குடத்தை உடைத்துக்கொண்டு வெளியே வந்தாள். அங்கம் என்றால் எலும்பு. எலும்பு உயிர்ப்பெற்று வந்ததால் அங்கம் பூம்பாவை என்று அழைக்கப்பட்டாள். இந்தச் சம்பவம் பெரிய புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சிவநேசரும் மற்றவர்களும் தங்கள் கண் முன் நடந்த இந்த தெய்வீக அதிசயத்தை கண்டு திகைத்து நின்றார்கள். கபாலீஸ்வர கோயில் கோபுரத்தை பார்த்து, தலைமீது கைகூப்பி வணங்கி மக்களின் “ஓம் நம சிவாய” என்ற மந்திரம் விண்ணையே அதிர செய்தது.பூம்பாவைக்கும் சிவநேசருக்கும் ஆசி வழங்கி புறப்பட்டார் திருஞானசம்பந்தர்...இதனை அருணகிரி நாதர் தனது திருப்புகள் பாடலில் பதிவ் செய்து உள்ளார் .."மயிலைநகர் மேவும் உக்ரதுரகத கலாபப் பச்சை மயில்வீராஅளகை வணிகோர் குலத்தில் வனிதை உயிர் மீளழைப்பஅருள்பரவு பாடல் சொற்ற குமரேசாஅருவரையை நீறெழுப்பி நிருதர்தமை வேரறுத்துஅமரர் பதி வாழ வைத்த பெருமாளே"...ஞானசம்பந்தர் மறுத்தபின் வேறு எவருக்கும் தனது மகளை மணமுடிக்க விரும்பாத சிவநேசர், திருக்கோயில் அருகிலேயே கன்னிமாடம் ஒன்று அமைத்து, அங்கேயே மகளை தங்கச் செய்தார்; அவளும் சிவத்தொண்டு புரிந்து வந்தாள்.திருஞானசம்பந்தர் பாடிய பதிகத்தால் உயிர்பெற்றாள் பூம்பாவை என்பதை சற்றே மாற்றி, அவளை உயிர்ப் பிக்க முருகனே பாடியதாக அருணகிரியார் கூறுகிறார்.[ முருகப் பெருமான் தான் திருஞானசம்பந்தராக அவதரித்ததாக கூறுவர்] ......நின்றால் பயம், நடந்தால் பயம், ஓடினால் பயம்,சாப்பிட்டால் பயம், தூங்கினால் பயம், பயம் பயம் பயம்?எம பயம். பயப்படாதீர்கள், உங்களின் பயம் நீங்கிட மயிலாப்பூர் திருத்தலத்தில் வழிபடுங்கள்.எனவே மயிலாப்பூர் கபாலீஸ்வரர் [பைரவர் சொரூபம் ]கற்பகம் அம்பாள் அடி பணிந்து வழிபட்டால் எம பயம் அண்டாது ..உயிருக்கு பாதுகாப்பு [நீண்ட ஆயுள் ]கிட்டும் என்பது உறுதி ..எம பயம் விலக, ம்ருத்யு தோஷம் விலக அருள் புரியும் மயிலாப்பூர் சம்பந்தர் பூம்பாவை பதிகம் ..... அவரவர் பிறந்த தினங்களிலும், திருமண ஆண்டு நிறைவு நாட்களிலும், சிறப்பாக 60, 80 ஆண்டு வயது நிறைவு நாட்களிலும் இப்பதிகத்தை ஓதி உரிய தான தர்மங்கள் அளித்து வந்தால் பிணிகள் அண்டாது ,நீண்ட ஆயுள் கிட்டும்....திருகடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஸ்ரீ அபிராமி அம்மன் தலத்தை போலவே இந்த திருதலத்தில் 59 வயது பூர்த்தி செய்தவர்கள் நல்ல ஆரோக்கியம் மற்றும் ஐஸ் வர்யத்துடன் வாழ, இந்த திருதலத்தில் உக்ரரத சாந்தி செய்து வழிபடுதல் நலம் என்பது ஐதிகம்.மற்றும் 60 வயது பூர்த்தி செய்தவர்கள் முழு குடும்ப நலனுக்காக சஷ்டியப்தபூர்த்தி சாந்தி அல்லது மணிவிழா, மற்றும் 70 வயது பூர்த்தி செய்தவர்கள் தங்கள் தலைமுறை நன்மைக்காக் பீமரத சாந்தி, மற்றும் 80 வயது பூர்த்தி செய்தவர்கள் தங்கள் வாழ்க்கை பரிபூரணாத்துவம் பெற சதாபிஷேகம் மற்றும் ஆயுஷ் ஹோமம் செய்து வழிபடுதல் நலம் என்பது ஐதிகம்,கூடவே சம்பந்தர் பூம்பாவை பதிகம் பாராயணம் செய்ய வேண்டும்..பூம்பாவை சன்னதி அருகில் ,நம் கபாலீஸ்வரர் கடை கண் தரிசனம் கிட்டும் இடத்தில ஹோமம் செய்து வழிபடுதல் நலம் ... . ஆனால் இந்த அரிய உண்மை இன்று வரை யாருக்கும் தெரிய வில்லை என்பது தான் நிஜம் ..இக்கோயிலின் மேற்கு கோபுரம் அருகில் பூம்பாவைக்கு சந்நிதி இருக்கிறது. அருகில் சம்பந்தர் இருக்கிறார். சம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பித்த நிகழ்ச்சி, பங்குனி பிரம்மோற்சவத்தின் 8ம் நாள் காலையில் நடக்கிறது. அப்போது சம்பந்தர், பூம்பாவை, சிவநேசர் மற்றும் உற்சவ மூர்த்திகள் கபாலி தீர்த்தத்திற்கு எழுந்தருள்கின்றனர். கும்பத்தில் அஸ்திக்கு பதிலாக நாட்டுச்சர்க்கரை வைத்து, சம்பந்தரின் பதிகம் பாடப்படுகிறது. பின்பு பூம்பாவாய் உயிருடன் எழுந்ததை பாவனையாக செய்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை பார்த்தாலும் தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை..
  2. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் நீண்ட ஆயுள் கிட்ட ,எம பயம் அகல வழிபட் கண் கண்ட தெய்வம் .."திக்கற்றோருக்கு தெய்வமே துணை!"....மயிலையே கயிலை; கயிலையே மயிலை என்னும் பெருமைக்குரிய தலமாகத் திருமயிலை திகழ்கிறது.திருமயிலை[மயிலாப்பூர் சென்னை ] தலத்தில் சிவநேசசெட்டியார் என்பவர் வாழ்ந்து வந்தார். சிவபெருமான் மீது அளவு கடந்த பக்தியுடைய அவருக்கு பூம்பாவை என்ற ஒரு மகள் இருந்தாள். திருஞானசம்பந்தரைப் பற்றியும் அவரின் சைவ சமய தொண்டினைப் பற்றியும் கேள்விப்பட்ட சிவநேசர் தன் மகள் பூம்பாவையை சம்பந்தருக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தார்.அவ்வாறு இருக்கையில் ஒரு சமயம் பூம்பாவை தோட்டத்தில் தன் தோழிகளுடன் மலர் பறித்துக் கொண்டு இருந்த போது பாம்பு தீண்டி இறந்து விடுகிறாள். மகள் இறந்து விட்ட போதிலும் அவள் சம்பந்தருக்கு உரியவள் என்ற எண்ணம் சிவநேசருக்கு வர மகளின் அஸ்தி மற்றும் எலும்புகளை ஒரு குடத்திலிட்டு கன்னி மாடத்தில் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தார்.மகளே இறந்துவிட்டாள், எலும்பையும் சாம்பலையும் புனித நதியில் கரைக்காமல் இவன் அவளின் எலும்பை பாதுகாத்து என்ன செய்ய போகிறான்?. என்று ஊர் மக்களும் உறவினர்களும் பேசினாலும், அதை பற்றி எதையும் காதில் வாங்காமல் சிவநேசர் தன் சிவதொண்டில் தொடர்ந்தார். மயிலை கபாலீஸ்வரனும் அன்னை கற்பகவல்லியும் சிவநேசர் மீது கருனை காட்டினார்கள். திருஞானசம்பந்தரை திருவொற்றியூர் வரவழைத்தார்கள். திருவொற்றியூருக்கு சம்பந்தர் வந்த தகவல் சிவநேசருக்கு தெரிந்தது. திருவொற்றியூருக்கு சென்று சம்பந்தரை பார்த்து வணங்கி, “சுவாமி அருகில்தான் மயிலாப்பூர் இருக்கிறது. தாங்கள் அவசியம் வர வேண்டும்.” என்று அழைத்தார். சிவநேசருடன் மயிலை வந்தார் ஞானசம்பந்தர். கபாலீஸ்வரர் கோயிலை வணங்கினார். பிறகு சிவநேசரை பற்றியும் அவர் குடும்பத்தை பற்றியும் அவரிடமே கேட்க, சிவநேசர் தன் துக்கத்தை மறைக்க முடியாமல் அழுதார். தன் மகள் பூம்பாவையை தங்களுக்கு மனைவியாக கன்னிகாதானம் செய்து தர வளர்த்து வந்தேன். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு பாம்பு தீண்டி இறந்து போனாள். அவள் உடலை தகனம் செய்து சாம்பலையும் எலும்பையும் ஒரு குடத்தில் பாதுகாத்து வருகிறேன்.” என்று கதறியபடி சொன்னார் சிவநேசர். திருஞானசம்பந்தர் அந்த குடத்தை எடுத்து வரும்படி சொல்ல, பூம்பாவையின் ஆத்மாவுக்கு சம்பந்தர் சாந்தி தரபோவதாக எண்ணி உடனடியாக குடம் கபாலீஸ்வரர் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. “மட்டிட்ட புன்னையுங் கானல் மடமயிலைக்…, என தொடங்கும் பதிகத்தை பாடினார். பாடலில்? கார்த்திகை நாள் விளக்கீடு காணாதே போதியோ பூம்பவாய்? தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்? என்று குடத்தில் எலும்பும் சாம்பலாகவும் இருக்கும் பூம்பாவையிடமே கேட்கிறார் திருஞானசம்பந்தர். சம்பந்தர் பாடி முடித்ததும் அப்போது பூம்பாவை உயிரோடு இருந்திருந்தால் என்ன வயது இருக்குமோ அந்த வயதோடு குடத்தை உடைத்துக்கொண்டு வெளியே வந்தாள். அங்கம் என்றால் எலும்பு. எலும்பு உயிர்ப்பெற்று வந்ததால் அங்கம் பூம்பாவை என்று அழைக்கப்பட்டாள். இந்தச் சம்பவம் பெரிய புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சிவநேசரும் மற்றவர்களும் தங்கள் கண் முன் நடந்த இந்த தெய்வீக அதிசயத்தை கண்டு திகைத்து நின்றார்கள். கபாலீஸ்வர கோயில் கோபுரத்தை பார்த்து, தலைமீது கைகூப்பி வணங்கி மக்களின் “ஓம் நம சிவாய” என்ற மந்திரம் விண்ணையே அதிர செய்தது.பூம்பாவைக்கும் சிவநேசருக்கும் ஆசி வழங்கி புறப்பட்டார் திருஞானசம்பந்தர்...இதனை அருணகிரி நாதர் தனது திருப்புகள் பாடலில் பதிவ் செய்து உள்ளார் .."மயிலைநகர் மேவும் உக்ரதுரகத கலாபப் பச்சை மயில்வீராஅளகை வணிகோர் குலத்தில் வனிதை உயிர் மீளழைப்பஅருள்பரவு பாடல் சொற்ற குமரேசாஅருவரையை நீறெழுப்பி நிருதர்தமை வேரறுத்துஅமரர் பதி வாழ வைத்த பெருமாளே"...ஞானசம்பந்தர் மறுத்தபின் வேறு எவருக்கும் தனது மகளை மணமுடிக்க விரும்பாத சிவநேசர், திருக்கோயில் அருகிலேயே கன்னிமாடம் ஒன்று அமைத்து, அங்கேயே மகளை தங்கச் செய்தார்; அவளும் சிவத்தொண்டு புரிந்து வந்தாள்.திருஞானசம்பந்தர் பாடிய பதிகத்தால் உயிர்பெற்றாள் பூம்பாவை என்பதை சற்றே மாற்றி, அவளை உயிர்ப் பிக்க முருகனே பாடியதாக அருணகிரியார் கூறுகிறார்.[ முருகப் பெருமான் தான் திருஞானசம்பந்தராக அவதரித்ததாக கூறுவர்] ......நின்றால் பயம், நடந்தால் பயம், ஓடினால் பயம்,சாப்பிட்டால் பயம், தூங்கினால் பயம், பயம் பயம் பயம்?எம பயம். பயப்படாதீர்கள், உங்களின் பயம் நீங்கிட மயிலாப்பூர் திருத்தலத்தில் வழிபடுங்கள்.எனவே மயிலாப்பூர் கபாலீஸ்வரர் [பைரவர் சொரூபம் ]கற்பகம் அம்பாள் அடி பணிந்து வழிபட்டால் எம பயம் அண்டாது ..உயிருக்கு பாதுகாப்பு [நீண்ட ஆயுள் ]கிட்டும் என்பது உறுதி ..எம பயம் விலக, ம்ருத்யு தோஷம் விலக அருள் புரியும் மயிலாப்பூர் சம்பந்தர் பூம்பாவை பதிகம் ..... அவரவர் பிறந்த தினங்களிலும், திருமண ஆண்டு நிறைவு நாட்களிலும், சிறப்பாக 60, 80 ஆண்டு வயது நிறைவு நாட்களிலும் இப்பதிகத்தை ஓதி உரிய தான தர்மங்கள் அளித்து வந்தால் பிணிகள் அண்டாது ,நீண்ட ஆயுள் கிட்டும்....திருகடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஸ்ரீ அபிராமி அம்மன் தலத்தை போலவே இந்த திருதலத்தில் 59 வயது பூர்த்தி செய்தவர்கள் நல்ல ஆரோக்கியம் மற்றும் ஐஸ் வர்யத்துடன் வாழ, இந்த திருதலத்தில் உக்ரரத சாந்தி செய்து வழிபடுதல் நலம் என்பது ஐதிகம்.மற்றும் 60 வயது பூர்த்தி செய்தவர்கள் முழு குடும்ப நலனுக்காக சஷ்டியப்தபூர்த்தி சாந்தி அல்லது மணிவிழா, மற்றும் 70 வயது பூர்த்தி செய்தவர்கள் தங்கள் தலைமுறை நன்மைக்காக் பீமரத சாந்தி, மற்றும் 80 வயது பூர்த்தி செய்தவர்கள் தங்கள் வாழ்க்கை பரிபூரணாத்துவம் பெற சதாபிஷேகம் மற்றும் ஆயுஷ் ஹோமம் செய்து வழிபடுதல் நலம் என்பது ஐதிகம்,கூடவே சம்பந்தர் பூம்பாவை பதிகம் பாராயணம் செய்ய வேண்டும்..பூம்பாவை சன்னதி அருகில் ,நம் கபாலீஸ்வரர் கடை கண் தரிசனம் கிட்டும் இடத்தில ஹோமம் செய்து வழிபடுதல் நலம் ... . ஆனால் இந்த அரிய உண்மை இன்று வரை யாருக்கும் தெரிய வில்லை என்பது தான் நிஜம் ..இக்கோயிலின் மேற்கு கோபுரம் அருகில் பூம்பாவைக்கு சந்நிதி இருக்கிறது. அருகில் சம்பந்தர் இருக்கிறார். சம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பித்த நிகழ்ச்சி, பங்குனி பிரம்மோற்சவத்தின் 8ம் நாள் காலையில் நடக்கிறது. அப்போது சம்பந்தர், பூம்பாவை, சிவநேசர் மற்றும் உற்சவ மூர்த்திகள் கபாலி தீர்த்தத்திற்கு எழுந்தருள்கின்றனர். கும்பத்தில் அஸ்திக்கு பதிலாக நாட்டுச்சர்க்கரை வைத்து, சம்பந்தரின் பதிகம் பாடப்படுகிறது. பின்பு பூம்பாவாய் உயிருடன் எழுந்ததை பாவனையாக செய்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை பார்த்தாலும் தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை..

No comments:

Post a Comment