Friday, 21 November 2014

Events in November


· November 1 – Day of the leaders of the Bulgarian national revival
· In Ireland, November 1 is regarded as the first day of winter.
· November 1 is called November Day (Lá Samhna) in Celtic tradition and is thus named in the Irish Calendar, where the month is called Mí na Samhna.
· In the Christian calendar, November 2 is All Souls Day. It is known in Mexico as el Día de los Muertos (Day of the Dead), and the whole month of November is especially dedicated to praying for the dead
· Britain and New Zealand celebrate Guy Fawkes Night, the anniversary of the failed Gunpowder Plot, on November 5.
· In Indonesia, November 10 is known as National Heroes Day.
· November 10 is the birthday of the United States Marine Corps.
· Independence Day in Angola on November 11.
· Independence Day in Poland on November 11.
· Feast Day of St. Martin of Tours (Sint Maarten in the Netherlands and Sankt Martin in Germany); this is celebrated with parades in which the children carry lanterns, which they continue to carry as they go from door to door singing traditional songs for candy, which tradition arises from the same roots as trick-or-treating on Halloween, when people used to go around collecting "soul cakes". The parades usually feature a man in the costume of a Roman centurion on a horse and end with a re enactment of the old legend of the Saint dividing his cloak to share it with a beggar.
· Remembrance Day is celebrated on November 11 in the Commonwealth of Nations and various European countries (including France and Belgium) to commemorate World War I and other wars. It is known as Veterans Day in the United States.
· In India, Children's Day is celebrated on November 14, the birth date of first Indian Prime Minister Pandit Jawaharlal Nehru.
· World Diabetes Day is celebrated on November 14.
· The Leonids meteor shower reaches its peak around November 17.
· World Prematurity Day is November 17.
· Latvian Independence day is November 18.
· Discovery to the Eastern World of Puerto Rico by Christopher Columbus on November 19, 1493.
· International Men's Day is commemorated on November 19.
· Día de la Revolución, or Revolution Day, is celebrated in Mexico on November 20.
· Transgender Day of Remembrance has occurred on November 20 each year in the United States since 1999.
· National Adoption Day – November 21
· Independence Day in Lebanon is November 22.
· Rudolf Maister day in Slovenia is on November 23
· On November 24 each year, Lachit Divas is celebrated state wide in Assam, India, to commemorate the heroism of the great general Lachit Borphukan and the victory of the Assamese army over the Mughal army at the battle of Saraighat in 1671.
· Suriname celebrates its Independence Day on November 25.
· International Day for the Elimination of Violence against Women on November 25.
· Albanian Independence Day is on November 28.
· Scotland celebrates St Andrews Day, its official national day, on November 30. Since 2006 it has been an official bank holiday.
· Argentina celebrates the Day of National Sovereignty on November 20, to commemorate the Vuelta de Obligado battle. It has been declared an official national holiday in 2010
· The United States and Puerto Rico observe Thanksgiving on the fourth Thursday in November.
· For Western Christians, Advent usually begins on a Sunday during the last week of November (the Sunday between November 27 and December 3).

நண்பர்களே படித்து பகிர்ந்து ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் – அதிர்ச்சி தகவல்

நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு மிகச் சரியாகவே பட்டது.
அவர் சொன்னது இதுதான்.
வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்த தோடு “சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது” என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்!
வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்!
இதனை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்கக்கூடாது என்று முழங்கி அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்!
நண்பரின் ஆதங்கம் இதுதான். ‘சேதாரம் என்ற பெயரில் நகைக்கடைகளில் பெருங்கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவரது நியாயமான கேள்வி”.
16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங்கொள்ளையடிக்கிறார்கள் நகைக் கடை முதலாளிகள்.
இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ.48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் “ஒன்பதாயிரம் ரூபாய்” தண்டம் அழ வேண்டும்.
ஏறக் குறைய 16 சதவீதம்? “எதற்காக இந்த தெண்டம்? பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்?” எந்த அதி மேதாவியும் இதுவரை கேள்வி கேட்டதில்லை.
அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித் தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள்.
போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை ‘கூல்’ பண்ணுவார்கள்.
இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள்.
அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலே யே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது…
சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு… உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும்.
என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா?
பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும் தானே வாங்க வேண்டும்?
செய்கூலி கேட்பது நியாயம் தான்.
16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்?
இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை?
பல சரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை?
எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்?
அவர்களிடம் வழிப்பறி செய்வதைவிட மோசமான செயலல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது?
பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான்?
ஒரு நகைக்கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்?
மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில்.
கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது.
இது போன்ற பகற்கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும்.
அல்லது திருத்தப்படவேண்டும்.
விரைவில் இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்…! அதுவும் உங்களால் தான் முடியும்…!

Thursday, 20 November 2014

வாழ்க்கையின் உண்மை

ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள்.
ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான்.அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான்.பிறரோடு ஓடி விடுவாளோ என்று பயந்தான்.அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான்.ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள்.ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்து கொண்டாள்.ஒருநாள்...அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான்.எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான். தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான்.அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள். அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான்.அவளோ நீயோ சாகப்போகிறாய்.நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள். பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான்.அவளும் சாரி என்னால் உன் கல்லறைவரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது. அப்போது தான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது. ‘’நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன்.உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன் ‘’ என்று சொன்னாள். ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள். காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான். நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த வருத்தத்திலேயே மரித்தும் போயினான்.உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு.1. நான்காவது மனைவி நமது உடம்பு.நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை.நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான்.நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள்.அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள்.அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா.நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்.

பொன்மொழிகள் :-

1. சோம்பேறி என்பவன் இரண்டு முள்களும் இல்லாத கடிகாரம்; அது நின்றாலும் ஓடினாலும் பயனில்லை!
-கூப்பர்
2. உயிர் உள்ளவரை உழைத்து வாழ விரும்புகிறேன்: உழைக்க உழைக்கத்தான் எனக்கு உயிர்வாழ விருப்பம் அதிகரிக்கிறது!
-பெர்னார்ட் ஷா
3. ஊடுருவும் சூரிய ஒளி போன்றது உண்மை; அதை யாராலும் மூடி மறைக்க முடியாது!
-மில்டன்
4. உழைத்துச் சம்பாதிக்காத ஓய்வை, நாம் அனுபவிக்க முடியாது!
-டென்னிசன்
5. பட்டங்கள் மனிதர்களுக்குப் பெருமை சேர்ப்பதில்லை; மனிதர்கள்தான் பட்டங்களுக்குப் பெருமை அளிக்கிறார்கள்!
-மாக்கியவெல்லி
6. கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது!
-ரூபி பிளேக்
7. செய்யத்தக்கது இது என்று தெரிந்தும், எவன் அதைச் செய்யாமல் இருக்கிறானோ, அவனே கோழை!
-கன்ஃபூசியஸ்
8. அநீதி இழைப்பவன், அநீதிக்கு ஆளானவனைவிட அதிகமாகத் துயரடைவான்!
-பிளேட்டோ
9. மனிதர்களை உயர்ந்த மனிதர்களாக்குவது சோதனை நேரம்தான்! வெற்றி நேரமல்ல!
-தாமஸ் ஹூட்
10. மிக நல்ல புத்தகங்களை முதலிலேயே படித்துவிடு! இல்லையெனில் அவற்றைப் படிக்க உனக்கு வாய்ப்பு கிடைக்காமலேயே போய்விடும்!

சிந்தனை துளிகள்...

1. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்
2. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்
3. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
4. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய்
இருப்பதில்லை
5. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்
6. யார் சொல்வது சரி என்பதை விட, எது சரி என்பதே முக்கியம்
7. பலமுறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்
8. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதற் எறிவோம்
9. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்
10. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்
11. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்

மச்ச சாஸ்திரம் ......: ஆதாரம்: சாமுத்ரிகா லட்சணம் நூல்.

ஆண்களுக்கு
• இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் தீர்காயுள்.• நெற்றியின் வலப்புறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும்.• வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவார்.• வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும்.• வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும்.• வலது கண்ணுக்குள் வெண்படலத்தின் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர் ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார்.• இரு கண்களில் ஏதெனும் ஒன்றில் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பல பிரச்சனை சந்திப்பார்கள்.• இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை சீராக இருக்கும். இருப்பினும் தனது வாழ்நாளில் அவர் ஏதேனும் ஒரு வன்முறை சம்பவத்தை சந்திப்பார்.• இடது புருவத்தில் மச்சமிருந்தால் பணக்கஷ்டமான வாழ்க்கை அமையும்.• இடது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால் வறுமையான வாழ்க்கை அமையும் இருப்பினும் அதை சமாளிக்கும் பக்குவமும் இருக்கும்.• இடது கண்ணின் வலப்புறத்தில் சொத்து விஷயங்களில் சங்கடங்களை சந்திப்பார்கள். இருப்பினும் ஓரளவுக்கு சொத்தை சேகரித்து விடுவார்கள்.• இடது கண்ணின் இடப்புறத்தில் மச்சம் இருந்தால் உறவினர்களுடன் பிரச்சனை ஏற்பட்டு தனிநபர் ஆவார்கள். இருப்பினும் அவர்களது வாழ்நாளின் பிற்பகுதியில் அதிர்ஷ்டத்தை அடைவார்கள்.• மூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் எல்லா சௌகரியமும் பெற்றிடுவார்கள்.• மூக்கின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.• மூக்கின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் எதை நம்பாதவர்களாக இருப்பார்கள். தவறான பெண்ணின் நட்பு_சிநேகமும் இவர்களுக்கு இருக்கும்.• மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் தயக்க குணம் உள்ளவர்களாக இருப்பார்கள், சற்றே கர்வமும், சற்றே பாதுகாப்பு உணர்வும் இவர்களிடம் மிகுந்திருக்கும்.• மூக்கின் கீழே மச்சமுள்ளவர்கள் கேடான வழிகளில் பணத்தை செலவிடுபவர்களாக இருப்பார்கள்.• நாசித்துவாரங்களுக்கு மேலே மச்சம் உள்ளவர்கள நவநாகரீக மோகமுள்ளவர்களாக இருப்பார்கள். வசதியான வாழ்க்கையை கொண்டிருப்பார்கள்.• மேல் உதட்டிலோ அல்லது கீழ் உதட்டிலோ மச்சம் இருந்தால் அவர்கள் காதல் உணர்வு மிகுந்திருப்பார்கள்.• மோவாயில் மச்சம் இருந்தால் செல்வாக்கு, புகழ் இவற்றோடு சமூகத்தில் நல்ல மதிப்பு பெற்றிருப்பார்கள்.• மோவாயின் இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் மேடு, பள்ளமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள், கல்வியறிவும் குறைவாக இருக்கும்.• மோவாய்க்கு அடியில் மச்சம் இருந்தால் அவர்கள் இசையில் வல்லுநர்களாக இருப்பார்கள்.• வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவருக்கு பிறரை வசீகரிக்கிற சக்தி இருக்கும். உறவினர்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.• இடப்புறக் கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர் வறுமை, உயர்வு என இரண்டு விதமான வாழ்க்கையை மாறி, மாறி அனுபவிப்பார்.• வலது காதில் மேல் நுனியில் மச்சம் இருந்தால் தண்ணீரில் கண்டம் இருக்கக்கூடும்.• இடது காதின் மேல் நுனியில் மச்சம் இருந்தால் பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும்.• இரண்டு காதுகளிலும் மச்சம் இருந்தால் அவர் அதிர்ஷ்டக்காரர். பேச்சுதிறன், பிறரை வசீகரிக்கும் ஆற்றல், செல்வம் எல்லாமும் அவரை வந்தடையும்.• தொண்டையில் மச்சம் இருந்தால் திருமணத்தின் மூலம் அவர்களுக்குச் சொத்து கிடைக்கும்.• கழுத்தின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் பங்காளிகளின் மூலம் பெயரும், புகழும், சொத்தும் கிடைக்கும்.• கழுத்தின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் அவர் மிதமான நலன்களுடன் வாழ்வார்.• இடது மார்ப்பில் மச்சம் இருந்தால் ஆண் குழந்தைகள் நிறைய பிறக்கும். பெண்களிடம் மிகுந்த பாசமாக பழகுவார்.• வலது மார்பில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். பெண்கள் குழந்தைகள் நிறைய பெற்றிடுவார்.• மார்பின் மேல் புறத்தில் மச்சம் இருந்தால் பிறர் விஷயங்களில் தேவையில்லாம தலையிடும் குணத்துடன் இருப்பார். அமைதியான சுபாவமும் கடுமையான உழைப்பாளியாகவும் இருப்பார்.• வயிற்றின் மீது மச்சம் உள்ளவர்கள் பொதுவாக பெறாமை குணம் நிறைந்தவராக இருப்பார்கள்.• வயிற்றின் இடப்புறத்தில் மச்சமிருந்தால் நல்ல குணங்களையும் உழைத்து வாழ விரும்பும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.• வயிற்றில் கீழ்பக்கத்தில் மச்சம் இருந்தால் பலவீனமானவனாக இருப்பான்.• தொப்புள் மீது மச்சம் இருந்தால் அவன் வசதியான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக இருப்பான்.• வலது தோளில் மச்சம் இருப்பவர் சின்ன சின்ன விஷயக்களுக்கு கூட மனதை அலட்டிக் கொள்வார்.• வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நல்ல நண்பர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள்.• இடது உள்ளங்கையில் மச்சம் உள்ளவர்கள் தேவையில்லாத பிரச்சனைகளை தன் பக்கம் இழுத்துக் கொண்டு கஷ்டப்படுவார்கள்• முதுகில் மச்சம் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவும், பக்திமான்களாகவும் இருப்பார்கள்.• முதுகின் வலப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் பயந்த சுபாவம் உள்ளவராக இருப்பார்.• முதுகின் இடப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் சிறப்பான வாழ்க்கையை பெற்றிருப்பார். தீவிரமாக ஆலோசித்து பிறகு எந்த காரியத்தையும் செய்யும் மனநிலை அவருக்கு இருக்கும்.மச்ச சாஸ்திரம் ஆதாரம்: சாமுத்ரிகா லட்சணம் நூல்.பெண்களுக்கு:• ஒரு பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்கிற இடத்தில் மச்சம் இருந்தால் அவளுக்கு உயர் பதவியிலும் பெரிய அந்தஸ்திலும் உள்ள லட்சாதிபதியான கணவன் அமைவான். அவனுக்கு வாழ்க்கையில் எல்லா வசதி, வாய்ப்புகளும் கிடைக்கும்.• நெற்றியின் வலது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் அதிர்ஷ்டம் நிறைந்தவளாக இருப்பாள். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் மிக்கவளாக இருப்பாள். யார்க்கும், எதற்கும் அடங்கிப் போகாத குணம் இருக்கும்.• நெற்றியின் இடது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் ஒழுக்கத்தில் சிறந்தவளாக இருப்பாள். அதே மச்சம் கருப்பாக இருந்தால் அப்பெண் அற்பகுணம் உடையவளாகவும், வேண்டாத நபர்களின் சகவாசம் உள்ளவளாகவும் இருப்பாள்.• மூக்கின் மீது எங்காவது மச்சம் இருந்தால் அப்பெண் எடுத்த காரியங்களை செய்து முடிக்கும் ஆற்றல் மிகுந்தவளாக இருப்பாள்.• மூக்கின் நுனிப்பகுதியில் மச்சம் இருந்தால் அப்பெண்ணுக்கு அமையும் கணவர் மிகப்பெரிய செல்வந்தராக இருப்பார்.• மேல் உதடு அல்லது கீழ் உதட்டில் மச்சம் இருந்தால் அவள் அதிர்ஷ்டம் மிகுந்தவளாக, நல்லொழுக்கம் உடையவளாக, வாசனை பொʊருட்களின் மீது பிரியம் உள்ளவளாக, சிறந்த கணவனை அடைந்தவளாக இருப்பாள்.• மோவாயில் மச்சம் உள்ளவள் மிக உயர்ந்த எண்ணங்களைப் பெற்றிருப்பாள். பொறுமையும், அமைதியும் அவளின் உடன் பிறந்ததாக இருக்கும். குணத்திலும், தோற்றத்திலும் அழகான ஆணை கணவராக அடைந்திடுவாள்.• இடது கன்னத்தில் மச்சம் உள்ளவள் மற்றவர்களை வசீகரிக்கும் ஆற்றல் உள்ளவளாக இருப்பாள். அவள் விரும்பியதை செய்து முடிக்க பலர் காத்திருப்பார்கள்.• வலது கன்னத்தில் மச்சம் உள்ளவர்கள் கஷ்டங்கள் பலவற்றை சந்தித்து முன்னேற்றம் அடையும் திறனைப் பெற்றிருப்பாள். கஷ்டமும்_சந்தோஷமும் சமமாக அனுபவிப்பாள்.• கழுத்தில் வலப்புறத்தில் மச்சம் உள்ளவள் முதல் பிரசவத்தில் ஆண் குழந்தையை பெறுவாள். பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டிற்கும் அதிர்ஷ்டத்தை தேடித் தருவாள்.• தலையில் மச்சம்தலையில் எங்கு மச்சம் இருந்தாலும் அந்தப் பெண்ணிடம் பேராசையும், பொறாமை குணமும் நிறைய இருக்கும். வாழ்க்கையில் சந்தோசமோ, மன நிறைவோ இருக்காது.• ஆடம்பர வாழ்வுநெற்றியின் நடுவில் மச்சம் இருந்தால் அவள் அதிகார பதவியில் அமர் வாள். ஆடம்பர வாழ்வு கிடைக்கும். செய்வது எல்லாம் வெற்றியாகும். இரு புருவத்துக்கிடையே மச்சம் இருந்தா லும் மேற்சொன்ன பலனே. நெற்றியில் வலது பக்கம் மச்சம் இருந்தால் வறுமை வாட்டும். ஆனாலும் நேர்மையுடன் வாழ்வாள்.• கன்னத்தில் மச்சம்காதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள கன்னப் பகுதியில் இடது பக்கம் மச்சம் இருந்தால் வாழ்க்கை வசதிகர மாக இருக்கும். சந்தோசம் குடிகொண்டு இருக்கும். இதுவே வலதுபக்கம் என்றால் வறுமை வாட்டும்.• இடது தாடையில் மச்சம் இருந்தால் ஆள் அழகாக இருப்பாள். ஆண்கள் இவளைத் துரத்தித் துரத்திக் காதலிக்கத் துடிப்பார்கள். நற்குணமுடையவள். வலது தாடையில் மச்சம் என்றால் பிறரால் வெறுக்கப்படுவாள்.• கண்களில் மச்சம் இருந்தால் வாழ்க்கை ஏற்றமும், இறக்கமும் நிறைந்ததாக இருக்கும்.• அந்தஸ்துமூக்கு மீது மச்சம் இருந்தால் மிகப் பெரிய அதிர்ஷடம். நினைத்ததெல்லாம் நடக்கும். ஆடம்பர வாழ்வு, அந்தஸ்து இருக்கும். சமூக மதிப்பு கிடைக்கும்.• காதுகளில் மச்சம் இருந்தால் ஏகப்பட்ட செலவு செய்வார்கள். என்ன செலவு செய்தாலும் அதற்குத் தக்கபடி பணமும் வரும். சமுதாயத்தில் இவர்களுக்கு தனி மதிப்பு இருக்கும்.• நாக்கில் மச்சம் இருந்தால் அவள் கலைஞானம் கொண்டவளாக இருப்பாள். ரசனை அதிகம் இருக்கும்.• கழுத்தில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் 7 முறை அதிர்ஷடம் அடிக்கும்.• இடதுபக்க தோளில் மச்சம் கொண்டவள் ஏகப்பட்ட சொத்துகளுக்கு அதிபதியாவாள். பரந்த மனப்பான்மையுடன் பிறருக்கு தான தர்மம் செய்யும் குணம் இவளிடம் இருக்கும்.• மார்பில் மச்சம்பெண்ணின் இடதுபக்க மார்பகத்தில் வலது பக்கமாக மச்சம் இருந்தால் வாழ்வில் படிப்படியாக முன்னேறுவாள். அதுவே இடதுபுறமாக மச்சம் இருந்தால் உணர்ச்சிகள் அதிகம் இருக்குமாம். வலது பக்க மார்பில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் போராட்டம் இருக்கும்.• நெஞ்சின் இடப்பகுதியில் மச்சம் இருந்தால் அவளுக்கு காலாகாலத்தில் திருமணம் நடக்கும். நல்ல கணவன் அமைவான்.• தொப்புளுக்கு மேலே, வயிற்றில் மச்சம் காணப்பட்டால் அமைதியும், இன்பமும் கலந்த வாழ்க்கை அமையும். பிறரால் போற்றப்படுபவளாக இருப்பாள்.• தொப்புளில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்க்கை. தொப்புளுக்கு கீழே மச்சம் இருந்தால் வறுமையும், செல்வமும் மாறி மாறி வரும்.• முதுகில் மச்சம்கண்களுக்குத் தெரியாமல் முதுகில் எங்கு மச்சம் இருந்தாலும் துணிச்சலான காரியங்கள் அந்தப் பெண்ணிடத்தில் இருக்கும். வாழ்க்கை வசதிகரமானதாக இருக்கும். உடலில் ஆரோக்கியம் திகழும்.• உள்ளங்கை, முழங்கை, மணிக்கட்டு ஆகியவற்றில் எங்கு மச்சம் இருந்தாலும் அவளது குடும்பம் இனிமையாக இருக்கும். கலாரசனை உடைய பெண் இவள். சிறந்த நிர்வாகியும்கூட.• பிறப்புறுப்பில் மச்சம் இருக்கும் பெண்ணைவிட வேறு ஒரு அதிர்ஷடசாலி பெண் இருக்க மாட்டாள். உயர்ந்த பதவிகள் தேடி வரும்.• தொடைஇடதுதொடையில் மச்சம் இருந்தால் படிப்படியாக கஷடப்பட்டு வாழ்க்கையில் மிக உன்னத நிலைமை அடைவாள். வலது தொடையில் மச்சம் என்றால் தற்பெருமையும் அடங்காபிடாரித் தனமும் இருக்கும்.• இடது முழங்காலில் மச்சம் இருக்கும் பெண், புத்தி கூர்மையானவளாகவும், தன்னம்பிக்கை உடையவளாகவும் இருப்பாள். அதுவே வலது முழங்காலில் என்றால் அவள் பிடிவாதக்காரி.

செய்யக்கூடாதவை


  • 1) ஸந்த்யா காலத்தில் தூங்கக்கூடாது.
  • 2) ஆகாயத்தை பார்த்தபடி தூங்கக்கூடாது
  • 3) கோவில்களில் தூங்கக்கூடாது
  • 4)தானியங்களின் மீது படுத்து தூங்கக்கூடாது
  • 5)மரத்து நிழல்,ஒடிந்த கட்டில்,யானை தந்தத்தால் செய்யப்பட்ட படுக்கை,புரச கால் கட்டில்,அத்தி,ஆல்,இச்சி அரசு,நாவல்,ஆகிய மரங்களால் செய்யப்பட்ட கட்டில்,கருங்கல் படுக்கை ஆகியவற்றில் படுத்து தூங்கக்கூடாது.
  • 6)ஈரக்காலுடன் படுத்து தூங்கக்கூடாது.
  • 7)ஒரு காலால் மற்றொரு காலை தேய்த்து அலம்பக்கூடாது.
  • 8)கணவன் மனைவி இருவருக்கும் இடையில் போகக்கூடாது.
  • 9)குருவிற்கும் சீடனுக்கும் இடையே நடுவில் போகக்கூடாது.
  • 10)இரு கைகளாலும் தலையை சொறியக்கூடாது. 
  • 11)தலையில் வழித்து எண்ணையை உடம்பில் தடவக்கூடாது.


Monday, 17 November 2014

வந்தவர்களை வாழ வைக்கும் வந்தவாசி பற்றிய சில தகவல்கள்

1760 – ஜனவரி 22-ஆம் நாள் நடைபெற்ற போர் என்ற ஒரு ஒற்றை நிகழ்வை மட்டுமே வைத்துக்கொண்டு ஒரு வரலாற்றுப் பார்வையைப் பெற்று விட முடியாது. வந்தவாசியைக் கொண்டுள்ள திருவண்ணாமலைப் பகுதி, அதைச் சார்ந்துள்ள திருக்கோவிலூர், செஞ்சிப் பகுதிகளையும் இணைத்து தமிழக வரலாற்றில் தென்னிந்திய வரலாற்றில் இந்திய வரலாற்றில், சில தெளிவுகளை, சில புரிதல்களை நாம் பெற்முடியும் இதனை விளக்குவதற்கான ஒரு வாய்ப்பாகத்தான் வந்தவாசிப் போரின் 250 ஆண்டுகள் நிறைவினை நாம் நினைவிற்கொள்ள வேண்டியுள்ளது.
பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டிற்கும் பிரிட்டன் நாட்டிற்கும் இடையே ஆசியாவை கைப்பற்றும் முயற்சியில் போர் நடந்தது. அப்போது மூன்றாவது கர்நாடக போர் என்ற பெயரில் ஏழு ஆண்டுகள் தொடர்ந்து போர் நடந்து வந்தது. இந்த போர் 1756 முதல் 1763 வரை நடைபெற்றது. இதில் 1760 ஆம் ஆண்டு வந்தவாசி கோட்டையை கைப்பற்ற இரு நாடுகளும் மோதிக்கொண்டன. இந்த போரில் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த அயர் கூட் தலைமையிலான படை பிரான்சு நாட்டை சேர்ந்த ஜெனரல் லால்லி தலைமையிலான படையை தோற்கடித்தது. இந்த வெற்றி பிரிட்டனின் மாபெரும் வேறுபல வெற்றிக்கு வழி வகுத்தது.
இந்த போரில் பிரெஞ்சு அரசு 300 குதிரைப் படைகளையும், 2500 எண்ணிக்கை கொண்ட காலாட்படையையும், 1300 சிப்பாய்களையும், 3000 மராத்தா வீரர்களையும், 16 குண்டு துளைக்கும் கருவிகளையும் உபயோகித்தனர். அதே போல், முறையே ஆங்கிலேயர்களும் ( 80 250 1900 2100 26) உபயோகித்தனர். இந்த போரில், செங்கல்பட்டு, திண்டிவனம், திருவண்ணாமலை போன்ற இடங்கள் ஆங்கிலேயர்களின் பிடிக்குச் சென்றன.
இதற்குப் பின், 1761 இல் பாண்டிச்சேரி ஆங்கிலேயர்களின் பிரதேசமானது. ஆனால், மூன்றாம் கர்நாடகப் போரின் முடிவில், அதாவது 1763 இல், பாரிஸ் ஒப்பந்ததத்தின் படி, பாண்டிச்சேரி பிரெஞ்சு அரசின் வாணிபத் தளமாக உபயோப் பட ஆங்கிலேயர்களின் அரசு ஒத்துக் கொண்டது. பிரெஞ்சு அரசும் ஆங்கிலேயர்களுக்கு உறுதுணையாக இருக்கப் பணிந்தது. பிரெஞ்சு நாட்டவர்க்கும், ஆங்கிலேயர்களுக்குமான போரின் முடிவும், இந்தியர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்குமான போரின் தொடக்கமுமாக இந்த மூன்றாம் கர்நாடகப் போர் இருந்தது.
வந்தவாசி கோட்டையிலிருந்து செஞ்சிக் கோட்டை வரை சுரங்கப் பாதை இருந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த சுரங்கப் பாதைகள் காலப் போக்கில் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் அழிந்து விட்டதாக கூற படுகிறது. தற்போது கோட்டையில் மிஞ்சி இருப்பது சில பகுதிகள் மட்டுமே. மக்கள் ஆக்கிரமிப்பால் பெரும்பாலான கோட்டை அழிந்துவிட்டது. ஆனால் இப்போதும் கோட்டைக்குள் நுழைந்தால் பழங்காலத்து கத்தி, போர் உடைகள், குதிரை கடிவாளம், பீரங்கி குண்டுகள் போன்ற ஏராளமான பொருட்கள் கிடைப்பதாக கூறப் படுகின்றது.. மேலும் இந்த கோட்டையின் சுரங்கத்தினுள் புதையல்கள் இருக்க கூடும் எனவும் மக்கள் நம்புகின்றனர்

27 நட்சத்திரங்களின் அதிதேவதைகள் :

மனைவி அமைவதெல்லாம்!

திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்தே எல்லா ஆண்களையும் போல நானும் ஒரு வித உற்சாகத்துடனும்,பரவசத்துடனும் நாட்களை கடத்தினேன். கனவுகள் வராத நாள் கிடையாது. வரும் பெண்ணை பற்றிய எதிர்பார்ப்புகளும்,கற்பனைகளும் சுவாரஸ்யத்தை கூட்டியது. நெறைய பாலகுமாரன் புத்தகங்களை சேமித்து வைத்து இருந்தேன் வருகிறவளுக்கு படிக்க கொடுக்க வேண்டும் ஒருவேளை அவளும் பாலகுமாரன் ரசிகையாக இருந்தால் ..? நினைக்கவே சிலிர்ப்பாய் இருந்தது.
கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை எல்லாம் தூசு தட்டி எடுத்து பார்வையில் படும்படி வைத்தேன் . இளையராஜா பாடல்கள் தொகுப்புகளை வாங்கி வைத்தேன்.எஸ் .ஜானகி பாடல்களை தனியே பதிவு செய்து வைத்தேன்.கேரம் ,செஸ் போர்டு எல்லாம். இன்னும் பல விஷயங்கள் . ஒரு பெரிய கற்பனை கோட்டையில் வாழ துவங்கி இருந்தேன் .
ஒரு சுபயோக சுபதினத்தில் திருமணம் இனிதே நடந்தது..!
விருந்து முதற்கொண்ட சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்தது.
கீழ்க்கண்ட உரையாடல்கள் சில தினங்களில் சில தினங்கள் இடைவெளியில் நடந்தது.
புத்தகம் எல்லாம் படிக்கும் பழக்கம் இருக்கா ?
இல்லங்க நான் எந்த புக்கும் படிச்சது இல்ல..!
எந்த புக்கும் படிச்சது இல்லையா ?
ஆமாங்க எனக்கு இந்த புத்தகம் ஏதும் படிக்க புடிக்காது..!
இந்த குமுதம் ,ஆனந்த விகடன் இதெல்லாம் கூட படிச்சது இல்லையா ?
நான் + 2 படிச்சப்போ படிச்ச பாட புத்தகம் தான் நான் கடசியா படிச்சது அதுக்கப்புறம் எந்த புக்கும் படிச்சது இல்ல...!
எதோ ஜோக் சொன்னதுபோல அவள் சொல்லி சிரிக்க நான் வெளிறிபோனேன் ..!
எனக்கு மண்டை காய்ந்துபோனது எந்த ஒரு புத்தகமும் படிகாதவளிடம் போய் பாலகுமாரனை பற்றி பேச முடியுமா..? சேர்த்து வைத்து இருந்த புத்தகங்கள் ...?ஒரு அட்டைப்படத்தில் பால குமரன் என்னை கவலையுடன் பார்ப்பதாக தோன்றியது ..!
கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை பார்வையில் படும்படிதான் வைத்து இருந்தேன்..! அதை பற்றி அவள் கேட்கவேண்டும் நான் பீற்றி கொள்ளவேண்டும் இதுதான் திட்டம் .
ஆனால் ..? எதோ வீட்டில் உள்ள காலண்டரை பார்ப்பது ,வால் கிளாக்கை பார்ப்பதுபோல அந்த பரிசுகளை கோப்பைகளை அவள் கண்டுகொள்ளவே இல்லை.
அப்புறம் வேறு வழி இல்லாமல் நானே சொல்ல ஆரம்பித்தேன் ..!
இந்த கப் எல்லாம் நான் வாங்கினது தெரியுமா ..?
எதுக்கு வாங்குனீங்க..?
இதெல்லாம் நான் கிரிக்கெட் வெளையாடி வாங்கினது
ஒனக்கு கிரிக்கெட் புடிக்குமா ..? கிரிக்கெட் பார்ப்பியா ..?
எங்க வீட்டுல எல்லாரும் கிரிக்கெட் பார்ப்பாங்க எனக்கு மட்டும் கிரிக்கெட் சுத்தமா புடிக்காது ..!
(அதானே எனக்குன்னு இப்படித்தான் வாய் க்கனும்னு இருக்கும்போது எப்படி கிரிக்கெட் புடிக்கும் )
யாரோ பின் மண்டையில் பேட்டால் அடித்தது போல இருந்தது..! நொந்துபோனேன்..!
இந்த பாடகர் - பாடகிகள்ல உனக்கு யார புடிக்கும்..?
ம்ம்... இவங்களத்தான் புடிக்கும்னு சொல்ல முடியாது பொதுவா எல்லா பாட்டும் கேப்பேன்..!
உனக்கு புடிச்ச பாட்டு ஒன்னு சொல்லேன்..!
அட போங்க திடீர்னு இப்படி கேட்டா எப்படி சொல்லுறது ..?
சரி எஸ் .ஜானகி புடிக்குமா ?
யாரு கெழவி போல இருக்குமே அதுவா ?
எஸ் .ஜானகியை கெழவி ன்னு சொன்னதும் எனக்கு செம கோவம் ...!எனக்கு புடிச்ச பாடகி அவரை கிழவின்னு சொன்னதும் என்னால அதை பொறுத்துக்க முடியல. என்ன செய்ய எல்லாம் விதி...!
என்னை நானே நொந்து கொள்வதை தவிர வேறு வழியில்லை அவள்மேல் கோபப்பட முடியவில்லை ஆனால்..? அவளுக்கு கோவம் அதிகம் வரும் முன்கோபி என் பாதுகாப்பும் முக்கியமில்லையா எதுவும் எனக்கு பிடிக்கவில்லை.
மனைவி விசயத்தில் மிகுந்த ஏமாற்றம் ...!துளியும் எனக்கு எந்த விதத்திலும் பொருத்தமில்லை .
ஆணித்தரமாய் எனக்கு தோன்றியது இதுதான்
இவள் எனக்கு ஏற்ற ஜோடிஇல்லை .
கணவன் மனைவி இருவரும் இரட்டை மாட்டு வண்டியைபோல என்று சொல்வார்கள் ஒரு மாடு சரியில்லாமல் போனாலும் குடும்ப வண்டி சரியாக ஓடாது என்று. உண்மைதான். நான் இப்படி முடிவு எடுத்தேன் பேசாமல் அவளையும் வண்டியில் தூக்கி உட்கார வைத்துவிட்டு ஒற்றை மாடாக வண்டியை ஓட்ட வேண்டியதுதான். வேறு என்ன செய்வது ? எங்களுக்குள் எந்த கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகவில்லை..!
பெரிய சுவாரசியம் ஏதுமின்றி நகர்ந்தன நாட்கள் சில மாதங்களில் மனைவி கர்பவதியகவே நிலைமை மாற தொடங்கியது. வீடு உற்சாகத்தில் திளைத்தது ஆளாளுக்கு அவளை கொண்டாட ஆரம்பித்தோம்.
மாசமா இருக்கும்போது என்னவெல்லாம் புடிக்குமோ அதெல்லாம் வாங்கி கொடுக்கணும் புடிச்சத சமைச்சு போடணும் - இது என் அம்மா
நானும் அவளிடம் கேட்கிறேன்
உனக்கு என்னவெல்லாம் சாப்பிட புடிக்கும் சொல்லு
அதெல்லாம் ஒன்னும் வேணாம்
இல்ல சொல்லு நான் வற்புறுத்தி கேட்கிறேன்
பிடிக்குமென சிலதை சொல்ல
முன் சமயங்களில் என்ன சமையல் செய்யலாம் என்ற விவாதம் வரும்போது இதையெல்லாம் சொல்லி இருக்கிறாள் நானும் சாதாரணமாய் அதையெல்லாம் மறுத்து இருக்கிறேன் ஆனால் அவளுக்கு பிடிக்குமென சொன்னதில்லை.
இதெல்லாம் உனக்கு புடிக்குமா இதுவர சொன்னதே இல்ல ..?
ம்ம்ம் இப்போதானே கேக்குறீங்க.
அவள் சிரித்து கொண்டே சொல்ல எனக்குள் சுளீரென ஒரு குற்ற உணர்ச்சி ஏற்பட்டது.
பிரசவம் நெருங்க இயல்பாய் ஒரு பதற்றம் தொற்றி கொண்டது இன்னும் சில தினங்களில் இங்கே ஒரு குழந்தை இருக்கும் என்ற எண்ணமே ஆனந்த கூத்தாட வைத்தது.
நாங்கள் விரும்பிய படியே அழகிய பெண் குழந்தை நார்மல் டெலிவரிதான் .
நான் நினைத்து இருந்தேன் பிரசவம் ஆன பெண்கள் ஒரு வாரம் பத்துநாள் என படுக்கையிலேயே இருப்பார்கள் என ஆனால் இவள் மறுநாளே சாதரணமாக நடமாட ஆரம்பித்தாள் யாராவது பெரியவர்கள் குழந்தையை பார்க்க வந்தால் சொல்ல சொல்ல கேட்காமல் கட்டிலிலிருந்து இறங்கி எழுந்து நின்று கொள்வாள் மரியாதையை நிமித்தமாய்.
இவளில் இந்த செய்கை குறித்து உறவினர்கள் புகழ்ச்சியாய் பேச எனக்கோ மிகவும் பெருமையாய் இருந்தது.
பெண்களின் குணம் எப்படி இருந்தாலும் தாய் ஆன பிறகு எல்லா பெண்களும் ஒரேமாதிரித்தான் இருக்கிறார்கள். கோபம்,ஆத்திரம் இவைகள் எல்லோருக்கும் பொதுவானதுதான் ஆனால் குழந்தை கவனிப்பில் எப்போதும் பொறுமை மட்டுமே காட்டுகிறார்கள் நள்ளிரவில் குழந்தை அழுதாலும், மலம் கழித்தாலும் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் கவனிக்கும் தன்மை இயல்பாகவே வந்து விடுகிறது.
குழந்தையையும் கவனித்துகொண்டு எனக்கு செய்யும் பணிவிடைகளிலும் எந்த குறையும் வைக்கவில்லை .
தாய்மை என்ற விசயத்தை என் தாயிடம் உணர்ந்ததைவிட மனைவியிடமே அதிகம் தெரிந்து கொள்ள முடிந்தது . இப்போது அவள்மேல் ஒரு மரியாதையை ஏற்பட துவங்கியது .
வீட்டு வேலைகள் குழந்தை வளர்ப்பு என அவள் சுமை எனக்கு புரிந்தது..!
சில வருடங்கள் போக...! இப்போது இரண்டாவது குழந்தை...! முதல் குழந்தை நார்மல் டெலிவரி ஆனால் இரண்டாவது சிசேரியன்.
இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் மயக்கத்தில் இருக்கும் அவளை பார்க்க செல்கிறேன் தூக்கம் போலவும் இல்லாமல் ,மயக்கம் போலவும் இல்லாமல் மூக்கில் எதோ ஒரு குழாய் இருக்க அவள் இருந்த நிலை என்னை ஒரு மாதிரி ஆக்கிவிட்டது. அப்போது நினைத்து கொண்டேன் இவளிடம் இனி எதற்கும் கோபப்பட கூடாது என்ன சொன்னாலும் பொறுத்து கொள்ள வேண்டும் என்று ..!
சில பெண்கள் நினைத்து கொள்ளலாம் கணவன் தன்னிடம் அடங்கி போகிறான் என்று ..! அப்படி அல்ல...! சில நேரங்களில் மனைவி செய்த தியாகங்களுக்காகவும் அவள் அடைந்த சிரமங்களுகாகவும் மனைவிக்கு செலுத்தும் நன்றி கடனே அந்த அடங்கி போதல். மனைவியை ஜெயிக்க விட்டு அதனால் அவள் அடையும் சந்தோசத்தை ரகசியமாய் பார்த்து ரசித்து கொள்ளுதல் எல்லாம் ஒரு நன்றி கடன்தான் .
இரண்டு குழந்தைகள், வீட்டு வேலைகள், குழந்தை படிப்பு, பாடம் சொல்லி கொடுத்தல், இதற்க்கு இடையே நான் செய்யும் அலும்புகள் எல்லாவற்றையும் சமர்த்தாக கவனித்துகொள்ளும் அவளிள் அந்த மனைவி ,இல்லத்தரசி என்ற ஸ்தானத்தின் பிரம்மாண்ட விஸ்வ ரூபத்தின் முன் ''நான்'' கொஞ்ச கொஞ்சமாக நலிந்து கொண்டு இருந்தேன். பால குமாரன் ,கிரிக்கேட் எஸ் .ஜானகி எல்லாம் என் கவனிப்பில் இருந்து விலகி செல்ல ..!
ஒற்றை மாட்டு வண்டியாக குடும்பத்தை ஓட்ட நினைத்தேன் ஆனால் சில சமயங்களில் அவள் ஒற்றை மாடாக வண்டியை இழுக்க நான் அதில் பயணம் செய்வதாக உணர்ந்தேன்.!
எங்களுக்குள் எந்த கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகவில்லை என நினைத்தேன்
ஆனால்...! இப்போது எங்களுக்குள்...!
தமிழ் ,ஆங்கிலம் ,வரலாறு ,புவியியல்,இயற்பியல்,தாவரவியல் ,விலங்கியல் வேதியல் எல்லாம் ஒர்க் அவுட் ஆகி போனது ..

மயிலாப்பூர் கபாலீஸ்வரர்


  1. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் நீண்ட ஆயுள் கிட்ட ,எம பயம் அகல வழிபட் கண் கண்ட தெய்வம் .."திக்கற்றோருக்கு தெய்வமே துணை!"....மயிலையே கயிலை; கயிலையே மயிலை என்னும் பெருமைக்குரிய தலமாகத் திருமயிலை திகழ்கிறது.திருமயிலை[மயிலாப்பூர் சென்னை ] தலத்தில் சிவநேசசெட்டியார் என்பவர் வாழ்ந்து வந்தார். சிவபெருமான் மீது அளவு கடந்த பக்தியுடைய அவருக்கு பூம்பாவை என்ற ஒரு மகள் இருந்தாள். திருஞானசம்பந்தரைப் பற்றியும் அவரின் சைவ சமய தொண்டினைப் பற்றியும் கேள்விப்பட்ட சிவநேசர் தன் மகள் பூம்பாவையை சம்பந்தருக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தார்.அவ்வாறு இருக்கையில் ஒரு சமயம் பூம்பாவை தோட்டத்தில் தன் தோழிகளுடன் மலர் பறித்துக் கொண்டு இருந்த போது பாம்பு தீண்டி இறந்து விடுகிறாள். மகள் இறந்து விட்ட போதிலும் அவள் சம்பந்தருக்கு உரியவள் என்ற எண்ணம் சிவநேசருக்கு வர மகளின் அஸ்தி மற்றும் எலும்புகளை ஒரு குடத்திலிட்டு கன்னி மாடத்தில் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தார்.மகளே இறந்துவிட்டாள், எலும்பையும் சாம்பலையும் புனித நதியில் கரைக்காமல் இவன் அவளின் எலும்பை பாதுகாத்து என்ன செய்ய போகிறான்?. என்று ஊர் மக்களும் உறவினர்களும் பேசினாலும், அதை பற்றி எதையும் காதில் வாங்காமல் சிவநேசர் தன் சிவதொண்டில் தொடர்ந்தார். மயிலை கபாலீஸ்வரனும் அன்னை கற்பகவல்லியும் சிவநேசர் மீது கருனை காட்டினார்கள். திருஞானசம்பந்தரை திருவொற்றியூர் வரவழைத்தார்கள். திருவொற்றியூருக்கு சம்பந்தர் வந்த தகவல் சிவநேசருக்கு தெரிந்தது. திருவொற்றியூருக்கு சென்று சம்பந்தரை பார்த்து வணங்கி, “சுவாமி அருகில்தான் மயிலாப்பூர் இருக்கிறது. தாங்கள் அவசியம் வர வேண்டும்.” என்று அழைத்தார். சிவநேசருடன் மயிலை வந்தார் ஞானசம்பந்தர். கபாலீஸ்வரர் கோயிலை வணங்கினார். பிறகு சிவநேசரை பற்றியும் அவர் குடும்பத்தை பற்றியும் அவரிடமே கேட்க, சிவநேசர் தன் துக்கத்தை மறைக்க முடியாமல் அழுதார். தன் மகள் பூம்பாவையை தங்களுக்கு மனைவியாக கன்னிகாதானம் செய்து தர வளர்த்து வந்தேன். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு பாம்பு தீண்டி இறந்து போனாள். அவள் உடலை தகனம் செய்து சாம்பலையும் எலும்பையும் ஒரு குடத்தில் பாதுகாத்து வருகிறேன்.” என்று கதறியபடி சொன்னார் சிவநேசர். திருஞானசம்பந்தர் அந்த குடத்தை எடுத்து வரும்படி சொல்ல, பூம்பாவையின் ஆத்மாவுக்கு சம்பந்தர் சாந்தி தரபோவதாக எண்ணி உடனடியாக குடம் கபாலீஸ்வரர் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. “மட்டிட்ட புன்னையுங் கானல் மடமயிலைக்…, என தொடங்கும் பதிகத்தை பாடினார். பாடலில்? கார்த்திகை நாள் விளக்கீடு காணாதே போதியோ பூம்பவாய்? தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்? என்று குடத்தில் எலும்பும் சாம்பலாகவும் இருக்கும் பூம்பாவையிடமே கேட்கிறார் திருஞானசம்பந்தர். சம்பந்தர் பாடி முடித்ததும் அப்போது பூம்பாவை உயிரோடு இருந்திருந்தால் என்ன வயது இருக்குமோ அந்த வயதோடு குடத்தை உடைத்துக்கொண்டு வெளியே வந்தாள். அங்கம் என்றால் எலும்பு. எலும்பு உயிர்ப்பெற்று வந்ததால் அங்கம் பூம்பாவை என்று அழைக்கப்பட்டாள். இந்தச் சம்பவம் பெரிய புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சிவநேசரும் மற்றவர்களும் தங்கள் கண் முன் நடந்த இந்த தெய்வீக அதிசயத்தை கண்டு திகைத்து நின்றார்கள். கபாலீஸ்வர கோயில் கோபுரத்தை பார்த்து, தலைமீது கைகூப்பி வணங்கி மக்களின் “ஓம் நம சிவாய” என்ற மந்திரம் விண்ணையே அதிர செய்தது.பூம்பாவைக்கும் சிவநேசருக்கும் ஆசி வழங்கி புறப்பட்டார் திருஞானசம்பந்தர்...இதனை அருணகிரி நாதர் தனது திருப்புகள் பாடலில் பதிவ் செய்து உள்ளார் .."மயிலைநகர் மேவும் உக்ரதுரகத கலாபப் பச்சை மயில்வீராஅளகை வணிகோர் குலத்தில் வனிதை உயிர் மீளழைப்பஅருள்பரவு பாடல் சொற்ற குமரேசாஅருவரையை நீறெழுப்பி நிருதர்தமை வேரறுத்துஅமரர் பதி வாழ வைத்த பெருமாளே"...ஞானசம்பந்தர் மறுத்தபின் வேறு எவருக்கும் தனது மகளை மணமுடிக்க விரும்பாத சிவநேசர், திருக்கோயில் அருகிலேயே கன்னிமாடம் ஒன்று அமைத்து, அங்கேயே மகளை தங்கச் செய்தார்; அவளும் சிவத்தொண்டு புரிந்து வந்தாள்.திருஞானசம்பந்தர் பாடிய பதிகத்தால் உயிர்பெற்றாள் பூம்பாவை என்பதை சற்றே மாற்றி, அவளை உயிர்ப் பிக்க முருகனே பாடியதாக அருணகிரியார் கூறுகிறார்.[ முருகப் பெருமான் தான் திருஞானசம்பந்தராக அவதரித்ததாக கூறுவர்] ......நின்றால் பயம், நடந்தால் பயம், ஓடினால் பயம்,சாப்பிட்டால் பயம், தூங்கினால் பயம், பயம் பயம் பயம்?எம பயம். பயப்படாதீர்கள், உங்களின் பயம் நீங்கிட மயிலாப்பூர் திருத்தலத்தில் வழிபடுங்கள்.எனவே மயிலாப்பூர் கபாலீஸ்வரர் [பைரவர் சொரூபம் ]கற்பகம் அம்பாள் அடி பணிந்து வழிபட்டால் எம பயம் அண்டாது ..உயிருக்கு பாதுகாப்பு [நீண்ட ஆயுள் ]கிட்டும் என்பது உறுதி ..எம பயம் விலக, ம்ருத்யு தோஷம் விலக அருள் புரியும் மயிலாப்பூர் சம்பந்தர் பூம்பாவை பதிகம் ..... அவரவர் பிறந்த தினங்களிலும், திருமண ஆண்டு நிறைவு நாட்களிலும், சிறப்பாக 60, 80 ஆண்டு வயது நிறைவு நாட்களிலும் இப்பதிகத்தை ஓதி உரிய தான தர்மங்கள் அளித்து வந்தால் பிணிகள் அண்டாது ,நீண்ட ஆயுள் கிட்டும்....திருகடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஸ்ரீ அபிராமி அம்மன் தலத்தை போலவே இந்த திருதலத்தில் 59 வயது பூர்த்தி செய்தவர்கள் நல்ல ஆரோக்கியம் மற்றும் ஐஸ் வர்யத்துடன் வாழ, இந்த திருதலத்தில் உக்ரரத சாந்தி செய்து வழிபடுதல் நலம் என்பது ஐதிகம்.மற்றும் 60 வயது பூர்த்தி செய்தவர்கள் முழு குடும்ப நலனுக்காக சஷ்டியப்தபூர்த்தி சாந்தி அல்லது மணிவிழா, மற்றும் 70 வயது பூர்த்தி செய்தவர்கள் தங்கள் தலைமுறை நன்மைக்காக் பீமரத சாந்தி, மற்றும் 80 வயது பூர்த்தி செய்தவர்கள் தங்கள் வாழ்க்கை பரிபூரணாத்துவம் பெற சதாபிஷேகம் மற்றும் ஆயுஷ் ஹோமம் செய்து வழிபடுதல் நலம் என்பது ஐதிகம்,கூடவே சம்பந்தர் பூம்பாவை பதிகம் பாராயணம் செய்ய வேண்டும்..பூம்பாவை சன்னதி அருகில் ,நம் கபாலீஸ்வரர் கடை கண் தரிசனம் கிட்டும் இடத்தில ஹோமம் செய்து வழிபடுதல் நலம் ... . ஆனால் இந்த அரிய உண்மை இன்று வரை யாருக்கும் தெரிய வில்லை என்பது தான் நிஜம் ..இக்கோயிலின் மேற்கு கோபுரம் அருகில் பூம்பாவைக்கு சந்நிதி இருக்கிறது. அருகில் சம்பந்தர் இருக்கிறார். சம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பித்த நிகழ்ச்சி, பங்குனி பிரம்மோற்சவத்தின் 8ம் நாள் காலையில் நடக்கிறது. அப்போது சம்பந்தர், பூம்பாவை, சிவநேசர் மற்றும் உற்சவ மூர்த்திகள் கபாலி தீர்த்தத்திற்கு எழுந்தருள்கின்றனர். கும்பத்தில் அஸ்திக்கு பதிலாக நாட்டுச்சர்க்கரை வைத்து, சம்பந்தரின் பதிகம் பாடப்படுகிறது. பின்பு பூம்பாவாய் உயிருடன் எழுந்ததை பாவனையாக செய்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை பார்த்தாலும் தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை..
  2. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் நீண்ட ஆயுள் கிட்ட ,எம பயம் அகல வழிபட் கண் கண்ட தெய்வம் .."திக்கற்றோருக்கு தெய்வமே துணை!"....மயிலையே கயிலை; கயிலையே மயிலை என்னும் பெருமைக்குரிய தலமாகத் திருமயிலை திகழ்கிறது.திருமயிலை[மயிலாப்பூர் சென்னை ] தலத்தில் சிவநேசசெட்டியார் என்பவர் வாழ்ந்து வந்தார். சிவபெருமான் மீது அளவு கடந்த பக்தியுடைய அவருக்கு பூம்பாவை என்ற ஒரு மகள் இருந்தாள். திருஞானசம்பந்தரைப் பற்றியும் அவரின் சைவ சமய தொண்டினைப் பற்றியும் கேள்விப்பட்ட சிவநேசர் தன் மகள் பூம்பாவையை சம்பந்தருக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தார்.அவ்வாறு இருக்கையில் ஒரு சமயம் பூம்பாவை தோட்டத்தில் தன் தோழிகளுடன் மலர் பறித்துக் கொண்டு இருந்த போது பாம்பு தீண்டி இறந்து விடுகிறாள். மகள் இறந்து விட்ட போதிலும் அவள் சம்பந்தருக்கு உரியவள் என்ற எண்ணம் சிவநேசருக்கு வர மகளின் அஸ்தி மற்றும் எலும்புகளை ஒரு குடத்திலிட்டு கன்னி மாடத்தில் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தார்.மகளே இறந்துவிட்டாள், எலும்பையும் சாம்பலையும் புனித நதியில் கரைக்காமல் இவன் அவளின் எலும்பை பாதுகாத்து என்ன செய்ய போகிறான்?. என்று ஊர் மக்களும் உறவினர்களும் பேசினாலும், அதை பற்றி எதையும் காதில் வாங்காமல் சிவநேசர் தன் சிவதொண்டில் தொடர்ந்தார். மயிலை கபாலீஸ்வரனும் அன்னை கற்பகவல்லியும் சிவநேசர் மீது கருனை காட்டினார்கள். திருஞானசம்பந்தரை திருவொற்றியூர் வரவழைத்தார்கள். திருவொற்றியூருக்கு சம்பந்தர் வந்த தகவல் சிவநேசருக்கு தெரிந்தது. திருவொற்றியூருக்கு சென்று சம்பந்தரை பார்த்து வணங்கி, “சுவாமி அருகில்தான் மயிலாப்பூர் இருக்கிறது. தாங்கள் அவசியம் வர வேண்டும்.” என்று அழைத்தார். சிவநேசருடன் மயிலை வந்தார் ஞானசம்பந்தர். கபாலீஸ்வரர் கோயிலை வணங்கினார். பிறகு சிவநேசரை பற்றியும் அவர் குடும்பத்தை பற்றியும் அவரிடமே கேட்க, சிவநேசர் தன் துக்கத்தை மறைக்க முடியாமல் அழுதார். தன் மகள் பூம்பாவையை தங்களுக்கு மனைவியாக கன்னிகாதானம் செய்து தர வளர்த்து வந்தேன். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு பாம்பு தீண்டி இறந்து போனாள். அவள் உடலை தகனம் செய்து சாம்பலையும் எலும்பையும் ஒரு குடத்தில் பாதுகாத்து வருகிறேன்.” என்று கதறியபடி சொன்னார் சிவநேசர். திருஞானசம்பந்தர் அந்த குடத்தை எடுத்து வரும்படி சொல்ல, பூம்பாவையின் ஆத்மாவுக்கு சம்பந்தர் சாந்தி தரபோவதாக எண்ணி உடனடியாக குடம் கபாலீஸ்வரர் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. “மட்டிட்ட புன்னையுங் கானல் மடமயிலைக்…, என தொடங்கும் பதிகத்தை பாடினார். பாடலில்? கார்த்திகை நாள் விளக்கீடு காணாதே போதியோ பூம்பவாய்? தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்? என்று குடத்தில் எலும்பும் சாம்பலாகவும் இருக்கும் பூம்பாவையிடமே கேட்கிறார் திருஞானசம்பந்தர். சம்பந்தர் பாடி முடித்ததும் அப்போது பூம்பாவை உயிரோடு இருந்திருந்தால் என்ன வயது இருக்குமோ அந்த வயதோடு குடத்தை உடைத்துக்கொண்டு வெளியே வந்தாள். அங்கம் என்றால் எலும்பு. எலும்பு உயிர்ப்பெற்று வந்ததால் அங்கம் பூம்பாவை என்று அழைக்கப்பட்டாள். இந்தச் சம்பவம் பெரிய புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சிவநேசரும் மற்றவர்களும் தங்கள் கண் முன் நடந்த இந்த தெய்வீக அதிசயத்தை கண்டு திகைத்து நின்றார்கள். கபாலீஸ்வர கோயில் கோபுரத்தை பார்த்து, தலைமீது கைகூப்பி வணங்கி மக்களின் “ஓம் நம சிவாய” என்ற மந்திரம் விண்ணையே அதிர செய்தது.பூம்பாவைக்கும் சிவநேசருக்கும் ஆசி வழங்கி புறப்பட்டார் திருஞானசம்பந்தர்...இதனை அருணகிரி நாதர் தனது திருப்புகள் பாடலில் பதிவ் செய்து உள்ளார் .."மயிலைநகர் மேவும் உக்ரதுரகத கலாபப் பச்சை மயில்வீராஅளகை வணிகோர் குலத்தில் வனிதை உயிர் மீளழைப்பஅருள்பரவு பாடல் சொற்ற குமரேசாஅருவரையை நீறெழுப்பி நிருதர்தமை வேரறுத்துஅமரர் பதி வாழ வைத்த பெருமாளே"...ஞானசம்பந்தர் மறுத்தபின் வேறு எவருக்கும் தனது மகளை மணமுடிக்க விரும்பாத சிவநேசர், திருக்கோயில் அருகிலேயே கன்னிமாடம் ஒன்று அமைத்து, அங்கேயே மகளை தங்கச் செய்தார்; அவளும் சிவத்தொண்டு புரிந்து வந்தாள்.திருஞானசம்பந்தர் பாடிய பதிகத்தால் உயிர்பெற்றாள் பூம்பாவை என்பதை சற்றே மாற்றி, அவளை உயிர்ப் பிக்க முருகனே பாடியதாக அருணகிரியார் கூறுகிறார்.[ முருகப் பெருமான் தான் திருஞானசம்பந்தராக அவதரித்ததாக கூறுவர்] ......நின்றால் பயம், நடந்தால் பயம், ஓடினால் பயம்,சாப்பிட்டால் பயம், தூங்கினால் பயம், பயம் பயம் பயம்?எம பயம். பயப்படாதீர்கள், உங்களின் பயம் நீங்கிட மயிலாப்பூர் திருத்தலத்தில் வழிபடுங்கள்.எனவே மயிலாப்பூர் கபாலீஸ்வரர் [பைரவர் சொரூபம் ]கற்பகம் அம்பாள் அடி பணிந்து வழிபட்டால் எம பயம் அண்டாது ..உயிருக்கு பாதுகாப்பு [நீண்ட ஆயுள் ]கிட்டும் என்பது உறுதி ..எம பயம் விலக, ம்ருத்யு தோஷம் விலக அருள் புரியும் மயிலாப்பூர் சம்பந்தர் பூம்பாவை பதிகம் ..... அவரவர் பிறந்த தினங்களிலும், திருமண ஆண்டு நிறைவு நாட்களிலும், சிறப்பாக 60, 80 ஆண்டு வயது நிறைவு நாட்களிலும் இப்பதிகத்தை ஓதி உரிய தான தர்மங்கள் அளித்து வந்தால் பிணிகள் அண்டாது ,நீண்ட ஆயுள் கிட்டும்....திருகடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஸ்ரீ அபிராமி அம்மன் தலத்தை போலவே இந்த திருதலத்தில் 59 வயது பூர்த்தி செய்தவர்கள் நல்ல ஆரோக்கியம் மற்றும் ஐஸ் வர்யத்துடன் வாழ, இந்த திருதலத்தில் உக்ரரத சாந்தி செய்து வழிபடுதல் நலம் என்பது ஐதிகம்.மற்றும் 60 வயது பூர்த்தி செய்தவர்கள் முழு குடும்ப நலனுக்காக சஷ்டியப்தபூர்த்தி சாந்தி அல்லது மணிவிழா, மற்றும் 70 வயது பூர்த்தி செய்தவர்கள் தங்கள் தலைமுறை நன்மைக்காக் பீமரத சாந்தி, மற்றும் 80 வயது பூர்த்தி செய்தவர்கள் தங்கள் வாழ்க்கை பரிபூரணாத்துவம் பெற சதாபிஷேகம் மற்றும் ஆயுஷ் ஹோமம் செய்து வழிபடுதல் நலம் என்பது ஐதிகம்,கூடவே சம்பந்தர் பூம்பாவை பதிகம் பாராயணம் செய்ய வேண்டும்..பூம்பாவை சன்னதி அருகில் ,நம் கபாலீஸ்வரர் கடை கண் தரிசனம் கிட்டும் இடத்தில ஹோமம் செய்து வழிபடுதல் நலம் ... . ஆனால் இந்த அரிய உண்மை இன்று வரை யாருக்கும் தெரிய வில்லை என்பது தான் நிஜம் ..இக்கோயிலின் மேற்கு கோபுரம் அருகில் பூம்பாவைக்கு சந்நிதி இருக்கிறது. அருகில் சம்பந்தர் இருக்கிறார். சம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பித்த நிகழ்ச்சி, பங்குனி பிரம்மோற்சவத்தின் 8ம் நாள் காலையில் நடக்கிறது. அப்போது சம்பந்தர், பூம்பாவை, சிவநேசர் மற்றும் உற்சவ மூர்த்திகள் கபாலி தீர்த்தத்திற்கு எழுந்தருள்கின்றனர். கும்பத்தில் அஸ்திக்கு பதிலாக நாட்டுச்சர்க்கரை வைத்து, சம்பந்தரின் பதிகம் பாடப்படுகிறது. பின்பு பூம்பாவாய் உயிருடன் எழுந்ததை பாவனையாக செய்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை பார்த்தாலும் தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை..

Monday, 10 November 2014

ஆண்களே! தாடி வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா...?

தாடி வைத்திருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையை வைத்திருப்பார்கள். நம் ஊர்களில் பெரும்பாலானவர்கள் காதலில் தோல்வியுற்றால் தாடி வளர்ப்பார்கள். இருந்தாலும் இப்போதெல்லாம் நிறையப் பேர் ஸ்டைலுக்காகவே தாடி வளர்த்து வைத்திருக்கிறார்கள். தாடிகளில் மயங்கும் பெண்களும் உண்டு என்பது கூட உண்மை தான்!
இப்படி தாடி வளர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது என்று கூறப்படுகிறது. இப்போது தாடி வளர்ப்பதால் கிடைக்கும் 7 உடல் நல நன்மைகள் குறித்துப் பார்ப்போமா...!
சரும புற்றுநோயைத் தடுக்கும்
சமீபத்திய ஆய்வின்படி, சூரியனிலிருந்து வரும் 95 சதவீத புறஊதாக் கதிர்கள் நம் சருமத்தை நேரடியாகத் தாக்காதவாறு நம் தாடி பாதுகாக்கிறதாம். இதனால் தான் தாடி வைத்திருக்கும் ஆண்களுக்கு சரும புற்றுநோயின் தாக்கம் குறைவாக உள்ளதாம்.
ஆஸ்துமா, அலர்ஜிக்கு...
தூசி உள்ளிட்ட பல அலர்ஜிகளைத் தடுப்பதில் அல்லது ஃபில்ட்டர் செய்வதில் தாடியின் பங்கு முக்கியமானதாக உள்ளது. இதனால் ஆஸ்துமாவையும் தவிர்க்க முடிகிறதாம்!
இளமையாக இருக்க...
தாடி வளர்த்திருப்பதால், சூரியனின் தாக்கம் மிகவும் குறைவாக இருப்பதால், தாடி இல்லாதவர்களை விட நீண்ட ஆண்டுகளுக்கு இளமையான தோற்றத்துடனே இருக்கலாமாம். தாடி ஒரு வயோதிகத் தோற்றத்தை வேண்டுமானால் கொடுக்கலாம்; ஆனால், உண்மையில் தாடி வைத்திருப்பவர்கள் இளந்தாரிகள் தான்!
குளிரைத் தாங்க...
தாடி வைத்திருப்பதால் குளிரை அதிகம் தாங்கிக் கொள்ள முடியுமாம். எவ்வளவுக்கு எவ்வளவு தாடி அடர்த்தியாக உள்ளதோ, அந்த அளவுக்கு அது குளிருக்கு இதமானதாக இருக்குமாம்.
நோய்த் தொற்றுக்கள் குறைய...
பாக்டீரியா உள்ளிட்ட நோய்த் தொற்றுக்களைக் குறைப்பதற்கு தாடி மிகவும் உபயோகமாக இருக்கிறது. சுத்தமாக ஷேவ் செய்திருப்பவர்களை இந்த நோய்த் தொற்றுக்கள் எளிதாகத் தொற்றிக் கொள்ளுமாம்.
குறைகளில்லா சருமத்திற்கு...
ஷேவிங்கின் போது ஏற்படும் வெட்டுக் காயங்கள், பருக்கள் உள்ளிட்ட சருமக் குறைபாடுகள் தாடி வைத்திருப்பவர்களுக்குக் கிடையாது. அவை இருந்தாலும் தாடிக்குள் ஒளிந்து தான் கிடக்கும்!
இயற்கையான ஈரப்பதத்திற்கு...
தாடி வைத்திருப்பதால் உலர்ந்த சருமம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அது குளிர்ந்த காற்றையே எப்போதும் தக்க வைத்துக் கொண்டிருப்பதால், சருமம் பாதுகாக்கப்படுகிறது. இதனால், தாடி இருந்தாலும் எப்போது முகம் ஜிலுஜிலுவென்றுதான் இருக்கும்.
நீங்களும் தாடி வளக்குறீங்களா பாஸ்??? என்ன ரீசன் ???

'Glories of Kartika'

“When one offers a lamp during the month of Karttika, his sins in many thousands and millions of births perish in half an eye blink.”
“A person who offers a lamp during the month of Kartika attains a result that cannot be obtained with even a hundred yajnas or a hundred pilgrimages.”
“Even a person addicted to all sins and averse to all pious deeds who somehow offers a lamp during Kartika becomes purified. Of this there is no doubt.”
“O Narada, no sin exists anywhere in the three worlds that will not be purified by offering a lamp to Lord Kesava during Kartika.”
“A person who offers a lamp to Lord Krishna during Kartika attains the eternal spiritual world where there is no suffering.”
“As fire is present in all wood and may be extracted by friction, so piety is always present in the offering of a lamp during the month of Kartika. Of this there is no doubt.”
“O King of brahmanas, when someone offers Him a lamp on the full-moon day of the month of Kartika, Lord Krishna, finding that He does not have sufficient MONEY to repay that gift, gives Himself in exchange for that lamp.”
“One who offers a steady lamp to Lord Hari during the month of Kartika enjoys pastimes in Lord Hari’s splendid spiritual world.”
“Even one who never performs religious rituals or even the worst sinner will surely be purified by this offering. O Narada, in the three worlds there is no sin that can stand before this Kartika dipa. In fact, by presenting this dipa before Lord Vasudeva, the eternal abode can be reached without obstruction.”
Few recommended practices in Kartika (Damodar) month
- Offer a ghee lamp daily to Lord Krishna and sing the Damodarastakam, meditating on the meaning.
- Always remember the Supreme Lord Krishna and try to do more chanting of Hare Krishna Mahamantra.
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
- Daily offer a lamp to Tulsi devi and pray for eternal residence in Vrndavana and eternal service of the lotus feet of Radha and Krishna.( Excerpts from Puranas)

Prabhupada Vision Śrīla Prabhupāda Says - [Regarding how when we surrender fully then there is no more karma - there is only bhakti]

Dr. Sharma: When you say surrender, it means surrender of fruits of the action?
Prabhupāda: No, surrender your life. That includes surrender of fruits and everything. Surrender your life.
Dr. Sharma: Surrender He uses many places, patraṁ puṣpaṁ phalaṁ toyaṁ [Bg. 9.26], karmaṇy evādhikāras te ma phaleṣu kadācana.
Prabhupāda: Yes, but that is not surrender. When you keep yourself in your so-called duty, that recommendation is there. But when you fully surrender, there is no more karma, everything is bhakti. And because you do not surrender, therefore He is recommending that you do your karma like this. But as soon as you surrender, you are above karma. Sa guṇān sama-tītyaitān brahma-bhūyāya, you are brahma-bhūtaḥ. Brahma-bhūtaḥ prasannātmā na śocati na kāṅkṣati [Bg. 18.54]. So long you do not surrender, He is linking your activities with Kṛṣṇa consciousness, "You do like this." Then one day you'll be able to surrender.
Just like Dhruva Mahārāja, he wanted the kingdom better than his father, grandfather. So he had to undergo so much severe austerities. He got Kṛṣṇa. But when he got Kṛṣṇa, he said svāmin kṛtārtho 'smi varam, "I don't want any benediction." So this position you can attain any moment, "My Lord, I surrender unto You. I don't want anything from You. Kindly give me shelter at Your lotus feet." This is the result of greatest tapasya. And Kṛṣṇa gives you protection. Kaunteya pratijānīhi na me bhaktaḥ praṇaśyati [Bg. 9.31]. So that is the highest perfection of life, to surrender to God without any reservations. Then life is perfect.
[Evening Darśana: Washington 8 July 1976]

அகத்தியரை காண வேண்டுமா!

அகத்தியர் என்பவர் 18 சித்தர்களுள் ஒருவர், இவரை காண கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும், இந்த பதிவை படிப்பதற்கு கூட நல்ல பூர்வ புண்ணியம் பெற்றிருக்க வேண்டும், இந்த கலியுகத்தில் குருவை தேடி கொண்டிருப்பவர்கள் மற்றும் அகத்திய மகரிஷியை காண நினைக்கிறவர்கள் கீழ் உள்ள மந்திரத்தை குறித்து வைத்து கொள்ளுங்கள்.
"ஓம் சிம் பம் அம் உம் மம் மகத்தான அகத்தியரே
என் குருவே வா வா வரம் அருள்க
அருள் தருக அடியேன் தொழுதேன்."
இந்த மந்திரத்தை தினமும் காலை 4 முதல் 6 வரையிலான காலத்தில் ஏதாவது 1 மணிநேரமும் இரவு 8 மணிக்கு மேல் 1 மணிநேரமும் கண்ணை மூடி ஜபிக்க (108 முறை ) வேண்டும், இதனை புதிகாக வாங்கப்பட்ட தியானத்திற்கு மட்டும் பயன்படுத்தும் வெள்ளை துண்டின் மேல் அமர்ந்து சொல்ல வேண்டும், 45 நாட்கள் கடுமையான அதாவது மது அசைவம் மற்றும் ஒரு மனதாக தெய்வ சிந்தனையுடன் விரதம் இருக்க வேண்டும், இவ்வாறு செய்ய 45 ஆம் நாள் அகத்தியர் காட்சி அளிப்பார்,